search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா நிவாரண நிதிக்காக உண்டியல்பணத்தை சிறுமி காவ்யாஸ்ரீ பெரியநாயக்கன்பாளையம்போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வழங்கினார்
    X
    கொரோனா நிவாரண நிதிக்காக உண்டியல்பணத்தை சிறுமி காவ்யாஸ்ரீ பெரியநாயக்கன்பாளையம்போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வழங்கினார்

    கொரோனா நிவாரண நிதிக்கு உண்டியல் பணத்தை வழங்கிய சிறுமி- போலீசார் பாராட்டு

    கோவையில் கொரோனா நிவாரண நிதிக்கு உண்டியலில் சேர்த்து வைத்த ரூ.836 பணத்தை வழங்கிய சிறுமியை போலீசார் பாராட்டினர்.
    இடிகரை:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியினை வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து பலர் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பண உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் 10 வயது மகள் காவ்யாஸ்ரீ தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தாள். இதையடுத்து நேற்று அந்த உண்டியலை தனது தந்தை மற்றும் சகோதரியுடன் எடுத்துவந்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோரிடம் வழங்கி, இதனை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்து விடுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது போலீசார் சிறுமி காவ்யாஸ்ரீயை பாராட்டினர். அந்த உண்டியலில் ரூ.836 இருந்தது. இந்த நிதியை போலீசார் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×