என் மலர்

  செய்திகள்

  காதலனை கரம் பிடித்த வங்கி பெண் அதிகாரி
  X
  காதலனை கரம் பிடித்த வங்கி பெண் அதிகாரி

  தற்கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்டு காதலனை கரம்பிடித்த வங்கி பெண் அதிகாரி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தர்மபுரி மாவட்டத்தில் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் வீடியோ வெளியிட்ட வங்கி பெண் அதிகாரி காதலனை கரம் பிடித்தார்.
  தர்மபுரி:

  விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 25). இவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் வெங்கடம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (26) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த ஒரு ஆண்டாக இவர்கள் காதலித்து வந்தனர்.

  இந்த நிலையில் அருண்குமார் ராஜேஸ்வரியுடன் பழகுவதை குறைக்க ஆரம்பித்தார். ராஜேஸ்வரியை அவர் திருமணம் செய்ய மறுத்தார். மேலும் அருண்குமாருக்கு பெற்றோர்கள் வேறொரு இடத்தில் பெண் பார்த்து வந்தனர்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்திலும் புகார் மனு அளித்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி. சுஜாதா விசாரணை நடத்தி வந்தார்.

  இந்த சூழ்நிலையில் ராஜேஸ்வரி நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்யப்போவதாக வாட்ஸ்-அப் மூலம் வீடியோ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து தர்மபுரி மகளிர் போலீசார் ராஜேஸ்வரி மற்றும் அருண்குமாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ராஜேஸ்வரியை திருமணம் செய்ய அருண்குமார் ஒப்புக்கொண்டார்.

  இதையடுத்து தர்மபுரி மகளிர் காவல்நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் அருண் குமார், ராஜேஸ்வரிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். மணமக்களை உறவினர் மற்றும் போலீசார் வாழ்த்தினார்கள்.
  Next Story
  ×