என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  சிறுமியை பலாத்காரம் செய்த பிளஸ்-2 மாணவன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து இறந்த வழக்கில் பிளஸ்-2 மாணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மாவட்டம் ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

  இது குறித்து கூம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் சமரசம் செய்து போராட்டத்தை கைவிடச் செய்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

  இது தொடர்பாக போலீசார் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் சிறுமியை பலாத்காரம் செய்ததை ஒத்துக்கொண்டான்.

  இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், பள்ளி மாணவன் தனக்கு பெற்றோர் வாங்கி கொடுத்த செல்போனில் பல ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளான். அதை பார்த்து சிறுமியிடம் தவறான முறையில் நடக்க முயன்றுள்ளான்.

  நேற்று முன்தினம் சிறுமிக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து தோட்டத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளான். சிறுமி சோர்வடையவே 9-ம் வகுப்பு படிக்கும் தனது தம்பியிடம் நடந்த விபரங்களை கூறி உள்ளான். அண்ணனுக்கு உதவுவதற்காக ஒரு டிராக்டரை எடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி உள்பட சிலரை அதில் ஏற்றி அழைத்து சென்றுள்ளான். ஏற்கனவே மயக்கம் அடைந்திருந்த அந்த சிறுமி டிராக்டரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாள்.

  இதனையடுத்து போலீசார் பலாத்காரம் செய்த மாணவனையும் இதற்கு உடந்தையாக இருந்த அவனது தம்பியையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். 14 வயது சிறுவனை டிராக்டர் ஓட்ட அனுமதித்த தோட்டத்தின் உரிமையாளர் உமாசேகர் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.

  Next Story
  ×