search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெண்கள் உடை மாற்றுவதை ஆபாச வீடியோ எடுத்த ஊழியர்

    பெட்ரோல் பங்கில் ரகசிய கேமிரா வைத்து பெண்கள் உடை மாற்றுவதை ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் கோவையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் உடை மாற்றும் அறையில் செல்போனை வைத்து வீடியோ எடுத்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    கோவையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் குடும்ப சூழ்நிலை காரணமாக ஏராளமான பெண்கள் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பணிக்கு வந்த பின்னர் வீட்டில் இருந்து அணிந்து வரும் உடைகளை மாற்றி விட்டு பெட்ரோல் பங்கில் கொடுக்கும் உடைகளை அணிவது வழக்கம்.

    இவ்வாறு பெண்கள் தங்களது உடைகளை மாற்றுவதற்காக ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் தனியாக பெண்களுக்கு அறைகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு பெண்கள் உடை மாற்றும் அறையில் ஆண் ஊழியர் ஒருவர் பெண் ஊழியர்களை ஆபாசமாக வீடியோ எடுத்த காட்சி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சியில்...

    பெட்ரோல் பங்கில் பெண்கள் வேலைக்கு வருவதற்கு முன்பு அவர்கள் உடைகள் மாற்றும் அறைக்கு வரும் ஆண் ஊழியர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ ஆன் செய்து விட்டு அங்கு உள்ள மறைவான இடத்தில் மறைத்து விட்டு செல்கிறார்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் பெண்கள் வேலைக்கு ஒன்றன் பின் ஒன்றாக வந்து வீட்டில் இருந்து அணிந்து வந்த ஆடைகளை கழற்றி கைப்பையில் வைத்து விட்டு பெட்ரோல் பங்கில் அணியக்கூடிய ஆடையை அணிகின்றனர். இவ்வாறு அந்த வீடியோவில் 5 பெண்கள் வரிசையாக வந்து ஆடைகளை மாற்றும் காட்சிகள் பதிவாகி உள்ளது. பெண்கள் ஆடைகளை மாற்றி விட்டு சென்ற பின்னர் வரும் ஆண் ஊழியர் ஆபாச வீடியோ பதிவான தனது செல்போனை எடுத்து செல்கிறார்.

    இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தால் பெட்ரோல் பங்குகளில் வேலை பார்க்கும் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×