search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் நாளை தேரோட்டம் நடக்கிறது. தேர் செல்லும் வழிப்பாதைகளில் கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்த காட்சி.
    X
    திருவண்ணாமலையில் நாளை தேரோட்டம் நடக்கிறது. தேர் செல்லும் வழிப்பாதைகளில் கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்த காட்சி.

    திருவண்ணாமலை மகாதீபம், பரணி தீப தரிசன சீட்டுகள் ஆன்லைனில் விற்பனை

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் மகா தீபம், பரணி தீப தரிசன சீட்டுகள் நாளை காலை ஆன்லைனில் மூலம் வெளியிடப்படவுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 10-ந்தேதி காலை 4 மணிக்குள் பரணி தீபம் தரிசனம் மற்றும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் ஆகியவை நடைபெறவுள்ளது.

    பரணி தீப தரிசனத்திற்கு ரூ.500 கட்டண சீட்டுகள் 500-ம் மற்றும் மகா தீபதரிசனத்திற்கு ரூ.600 கட்டண சீட்டுக்கள் 100 பேருக்கும், ரூ.500 கட்டண சீட்டுக்கள் 1000 பேருக்கும், நாளை காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் வெளியிடப்படவுள்ளது. கட்டண சீட்டுக்களை www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    கட்டணச் சீட்டை பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை.

    ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.

    கட்டணச் சீட்டு பதிவு செய்தவுடன், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓ.டி.பி.) குறுச்செய்தி பதிவு செய்யப்பட்டவர்களின் கைபேசி எண்ணிற்கு வரும்.

    கட்டண சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 10-ந் தேதி அன்று அதிகாலை 2 மணி முதல் 3 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 10-ந் தேதி மதியம் 2.30 மணி முதல் 3.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இரண்டு தீபம் நிகழ்வுகளை காண வரும் பக்தர்கள் அசல் கட்டண சீட்டு மற்றும் அசல் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு, கோவில் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

    குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகைதர தவறும் சேவார்த்திகளை கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

    ஆன்லைன் வழியாக கட்டணச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வரும் பக்தர்கள் விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு ஒத்துழைப்பை தரவேண்டும்.

    மேலும், மகா தீபத்திற்கு நெய்யினை காணிக்கையாக செலுத்துபவர்களுக்கு மற்றும் நெய்குடத்திற்கான காணிக்கை கட்டணத்தை செலுத்துபவர்களுக்கென,

    இராஜகோபுரம் (கிழக்கு) அருகில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை. திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்) நுழைவுவாயில். பேகோபுரம் அருகில் மலையேறும் பாதையின் முகப்பு.

    ஆகிய இடங்களில் கோவில் சார்பாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, காணிக்கை நெய்யினை பெற்றுக்கொள்ளவும், கட்டணச்சீட்டு விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தவிர, அக்னி தீர்த்தம் முன்புறம் மற்றும் பேயகோபுரம் (மேற்கு கோபுரம்) ஆகிய இடங்களில் பிரத்யேகமாக கோவில் சார்பாக கோசாலை அமைக்கப்பட்டு, சேவார்த்திகள் கோவில் கால்நடைகளுக்கு தீவணங்கள் வழங்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×