search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி
    X
    மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி

    திருவண்ணாமலை தீபத் திருவிழா - மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மகாதீப கொப்பரை சீரமைக்கும் பணி நடந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 1-ந் தேதி கோடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    10-ந் தேதி அதிகாலை கோவில் கருவறை எதிரே, பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை, 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதற்காக 6 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை அஜீஸ் காலனியில் உள்ள மண்ணு நாட்டார் குடும்பத்தினர் கொப்பரை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் 30 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகின்றனர்.

    தீபம் ஏற்றும்போது, வெப்பத்தால் கொப்பரை சேதமடையாமல் இருக்க, மேல்பாகம் 3.75 அடி, கீழ்பாகம், 2.75 அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், 20 வளைய இரும்பு ராடுடன் கூடிய, செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கொப்பரையை மலை உச்சிக்கு எடுத்து செல்ல வசதியாக, மேல்பாகம் மற்றும் கீழ் பாகத்தில், தலா, நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.



    Next Story
    ×