search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களை படத்தில் காணலாம்.

    சிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி கொலை- திருவள்ளூர் கோர்ட்டில் 5 பேர் சரண்

    சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் 5 பேர் சரணடைந்தனர்.
    திருவள்ளூர்:

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை, படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 38). ரவுடியான இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் அப்பகுதியில் உள்ள லாசர் தெரு சந்திப்பில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் தமிழரசனை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொன்றனர். இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் 21 ஆண்டுக்கு முன்பு நடந்த கொலையில் பழிக்குப்பழியாக தமிழரசன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. அதே பகுதியை சேர்ந்த பாம்பே சசி என்பவர் 21 ஆண்டுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதில் தமிழரசன் சம்பந்தப்பட்டு இருந்தார்.

    இது தொடர்பாக தமிழரசனுக்கும், பாம்பே சசியின் உறவினர் இமான் என்பவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த மோதலில் இமான், பாம்பே சசியின் மகன் நவீன் உள்பட கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழரசனை தீர்த்துக் கட்டியது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த அரவிந்தன் என்கிற இமான், விக்னேஷ், ஆதம்பாக்கத்தை சேர்ந்த அஜய், தாவூத், பல்லவன் நகரை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 5 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சரண் அடைந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இதன் பின்னரே கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இதில் தொடர்புடையவர்கள் யார்- யார்? என்பது தெரியவரும்.
    Next Story
    ×