search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள்
    X
    மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கபிணி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

    இன்று காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபிணி அணைகளில் இருந்து 11 ஆயிரத்து 599 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    மெயின் அருவியில் தண்ணீர் குறைந்து உள்ளது. ஐவர்பாணி அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ள நீர் செம்மண் நிறத்தில் கொட்டுகிறது.

    கரையோரத்தில் அவர்கள் குளித்து மகிழ்ந்தனர். உள்ளூரை சேர்ந்த பெண்கள் ஆற்றில் துணிகளை துவைத்தனர். இதற்கு முன்பு அதிகளவில் வெள்ளம் வந்ததால் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளித்தனர்.

    ஒகேனக்கல்லில் இன்று 13-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இன்று 42-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது.
    Next Story
    ×