search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈஷா யோகா மையம்
    X
    ஈஷா யோகா மையம்

    இந்திய ராணுவ வீரர்களுக்கு ஈஷாவில் ஹதயோகா பயிற்சி

    கோவை ஈஷா யோகா மையத்தில் 64 இந்திய ராணுவ வீரர்கள் 14 நாட்கள் ஹதயோகா பயிற்சி மேற்கொண்டனர்.
    இந்திய ராணுவ வீரர்கள் 64 பேர் கோவை ஈஷா யோகா மையத்தில் 14 நாட்கள் ஹதயோகா பயிற்சி மேற்கொண்டனர். ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி வகுப்பு நேற்று (ஆகஸ்ட் 19) நிறைவு பெற்றது.

    இவ்வகுப்பில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், ஜேசிஓ அதிகாரிகள் உட்பட 64 வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அங்கமர்த்தனா, சூர்ய க்ரியா, உப-யோகா, அம் மந்திர உச்சாடனை, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த யோகா பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

    இந்த பயிற்சி வகுப்புகளை அவர்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் மற்றும் மன ரீதியான பல்வேறு சவால்களை எளிதில் எதிர்கொள்ள முடியும். சில வீரர்களுக்கு, ஹதயோகா பயிற்சியாளர் ஆவதற்கான பிரத்யேக பயிற்சியும்  வழங்கப்பட்டது. அந்த வீரர்கள் தங்களுடைய ராணுவ முகாம்களுக்கு சென்று அங்குள்ள வீரர்களுக்கு ஹதயோகா கற்றுக்கொடுக்க உள்ளனர்.

    இதற்கு முன்பு 3 பி.எஸ்.எஃப் குழுவினருக்கும், ஒரு ராணுவ குழுவுக்கும் ஈஷாவில் 14 நாட்கள் ஹதயோகா பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும், சத்குரு அவர்கள் கடந்த ஜூன் 21-ம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க Floating Dock எனப்படும் இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் நடந்த யோகா தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, தரைப்படை, கடற்படை, விமானப் படை மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஈஷா யோகா ஆசிரியர்கள் யோகா கற்றுக்கொடுத்தனர்.
    Next Story
    ×