search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர் வலையில் சிக்கிய அரியவகை உயிரினம்
    X
    மீனவர் வலையில் சிக்கிய அரியவகை உயிரினம்

    ராமேஸ்வரம் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை உயிரினம்

    கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ராமேஸ்வர மீனவர் வலையில் அரியவகை கடல்வாழ் உயிரினம் ஒன்று சிக்கியுள்ளது.
    ராமேஸ்வரம்:

    ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் மீன்பிடி தளத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை மீனவர்கள் சிலர் கடலுக்கு மீன் பிடிக்க படகுகளில் சென்றனர். மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். 

    அப்போது, ஒரு படகில் இருந்த இரண்டு மீனவர் தாங்கள் வீசிய வலையை இழுத்தனர். அவர்களது வலையில் மீன்களுடன் சேர்ந்து கடலில் வாழும் அரியவகை உயிரினம் ஒன்றும் சிக்கியது. அந்த உயிரினத்தின் உடல் அமைப்பு மிகவும் வித்தியாசமாக வால் பகுதி மிகவும் நீளமாக இருந்ததால் ஆச்சரியம் அடைந்த மீனவர்கள் அதை கரைக்கு கொண்டுவந்தனர்.

    தகவலறிந்த ராமேஸ்வரத்தில் உள்ள சத்யபாமா கடல்சார் ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் அவரது குழுவினர் மண்டபம் மீன்பிடி துறை பகுதிக்கு சென்றனர். அவர்கள் மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை உயிரினத்தை ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் மீன்பிடி வலையில் சிக்கிய உயிரினம் ஸ்டிங் வகையை சேர்ந்த ஹிமண்டுரா எனப்படும் மீன் ஆகும். அதன் வால் பகுதியில் கூர்மையான ஊசி போன்ற அமைப்பு உள்ளது. அவை மிகுந்த விஷத்தன்மை கொண்டவை. இந்த வகை உயிரினம் தான்சானியா, பாலி மற்றும் தென் சீன கடல் போன்ற பகுதிகளில் மட்டுமே அரிதாக காணப்படும். இந்த உயிரினம் குறித்த அடுத்தகட்ட ஆய்வுக்காக கொல்கத்தாவில் உள்ள மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரின ஆய்வகத்தின் உதவியை நாட உள்ளோம் என தெரிவித்தனர்.
    Next Story
    ×