என் மலர்

  செய்திகள்

  அரியாங்குப்பத்தில் மைத்துனியிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது
  X

  அரியாங்குப்பத்தில் மைத்துனியிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியாங்குப்பத்தில் மைத்துனியிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  பாகூர்:

  புதுவை மூலகுளத்தை சேர்ந்தவர் ரமணா (வயது23) இவர் அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து மனைவியுடன் அரியாங்குப்பத்தில் வசித்து வந்தார். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு மனைவியின் 17-வயது தங்கையிடம் ஆசைவார்த்தை கூறி ரமணா பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் ரமணாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

  ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த ரமணா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று மனைவியின் தங்கை வீட்டில் தனியாக இருந்ததார். அப்போது அங்கு சென்ற ரமணா மீண்டும் மைத்துனியிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். அந்த நேரத்தில் ரமணாவின் மாமியார் வீட்டுக்கு வந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

  பின்னர் இதுகுறித்து அவர் அரியாங்குப்பம் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து ரமணாவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

  Next Story
  ×