search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் கழிவுகளால் கொடைக்கானல் நகருக்கு ஆபத்து - திண்டுக்கல் சீனிவாசன்
    X

    பிளாஸ்டிக் கழிவுகளால் கொடைக்கானல் நகருக்கு ஆபத்து - திண்டுக்கல் சீனிவாசன்

    பிளாஸ்டிக் கழிவுகளால் கொடைக்கானல் நகருக்கு ஆபத்து என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவி வருகிறது. எனவேதான் பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    கொடைக்கானல் மலை முழுவதும் தற்போது குறிஞ்சிப்பூ பூத்துக்குலுங்குகிறது. எனவே இந்த ஆண்டு குறிஞ்சி விழா முதல் முறையாக நடத்தப்படுகிறது. இதையொட்டி பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு எனும் விழா நடந்தது.

    விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    ஊட்டி போன்ற நகரங்களில் ஓட்டல்கள், பல மாடி கட்டிடங்களால் வர்த்தக மயமாகி விட்டது. இதனால் அங்கு பயணிகள் வரத்து குறைந்துள்ளது. எனவேதான் கொடைக்கானல் நகருக்கு ஏராளமானோர் வருகின்றனர். கொடைக்கானல் நகரில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளது.


    இதனால் கொடைக்கானல் நகருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் மலேரியா, டெங்கு போன்ற கொடிய நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களினால் வன விலங்குகள் பலியாகும் அபாயமும், கேன்சர் போன்ற வியாதிகளும் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

    எனவே கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். கொடைக்கானல் நகரில் குறிஞ்சிப்பூ பூக்கும் காலங்களில் அரசு விழாவாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×