search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஏரியின் நீர்மட்டம் குறைந்து மணல் திட்டுகள் தெரிவதை படத்தில் காணலாம்.
    X
    புழல் ஏரியின் நீர்மட்டம் குறைந்து மணல் திட்டுகள் தெரிவதை படத்தில் காணலாம்.

    புழல் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது

    புழல் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஒரே மாதத்தில் 193 மில்லியன் கனஅடி குறைந்தது. #PuzhalLake
    செங்குன்றம்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமானது புழல் ஏரி. இதனுடைய மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. தற்போது 959 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு சோழவரம் ஏரியில் இருந்து டீசல் மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு கால்வாய் வழியாக வினாடிக்கு 12 கனஅடி தண்ணீர் வருகிறது.

    புழல் ஏரியின் நீர் இருப்பு தற்போது மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கத்தாலும் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் இதே தேதியில் புழல் ஏரியின் நீர் இருப்பு 1,152 கனஅடியாக இருந்தது. ஒரே மாதத்தில் 193 மில்லியன் கனஅடி குறைந்துவிட்டது,

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடி. தற்போது சோழவரம் ஏரி வறண்டு 32 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த தண்ணீரும் தற்போது ராட்சத டீசல் மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு புழல் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம் வினாடிக்கு 12 கனஅடி தண்ணீர் புழல் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் புழல் ஏரியின் நீர், ஏரிக்கரையோரம் செங்குன்றம் பேரூராட்சியின் குப்பைகளை கொட்டி எரிப்பதாலும், ஏரி நீரில் பொதுமக்கள் துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது போன்ற காரணங்களாலும் மாசுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  #PuzhalLake
    Next Story
    ×