search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேச துரோக வழக்கில் கைது: மாணவி வளர்மதி இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்
    X

    தேச துரோக வழக்கில் கைது: மாணவி வளர்மதி இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்

    சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். #Valarmathi
    சென்னை:

    சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வடபழனி போலீசார் வளர்மதி மீது ஏற்கனவே ஜனவரி மாதம் தனியாக வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் இப்போது வளர்மதி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் அச்சமில்லை, அச்சமில்லை என்ற பெயரில் ஆடியோ ஒன்று கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வளர்மதி பேசினார். அவரது பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் தேச துரோக செயலில் ஈடுபடும் வகையில் இருந்ததாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில்தான் இப்போது வளர்மதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் போடப்பட்ட வழக்கில் வளர்மதியை கைது செய்ததற்கான உத்தரவை சேலம் மத்திய சிறையில் போலீசார் ஒப்படைத்திருந்தனர். இதனை ஏற்று அந்த வழக்கில் ஆஜர் படுத்துவதற்காக சேலத்தில் இருந்து வளர்மதியை சென்னைக்கு அழைத்து வந்தனர். சைதாப்பேட்டை கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். இந்த வழக்கிலும் நீதிமன்ற காவலில் வளர்மதி சிறையில் அடைக்கப்பட உள்ளார். #Valarmathi
    Next Story
    ×