என் மலர்

  செய்திகள்

  திருக்கனூர் பகுதியில் சூறை காற்றில் 25 ஏக்கர் வாழை சேதம்
  X

  திருக்கனூர் பகுதியில் சூறை காற்றில் 25 ஏக்கர் வாழை சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்கனூர் பகுதியில் நேற்று அதிகாலை வீசிய சூறை காற்றில் 25 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து முற்றிலும் சேதமானது.

  திருக்கனூர்:

  புதுவையில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் இடி- மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. திருக்கனூர் பகுதியில் சூறை காற்றுடன் மழை பெய்தது.

  இதில், கூனிச்சம்பட்டை சேர்ந்த அருள் கணேஷ் என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் வாழை மரங்களும், மஞ்சநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தட்சணா மூர்த்தி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் வாழை மரங்களும் முற்றிலும் முறிந்து சேதமானது.

  இதுபோல் காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டு இருந்த 25 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து போனது.

  குலை தள்ளிய நிலையில் வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்து போனதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி உள்ளனர். எனவே, அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×