என் மலர்

  செய்திகள்

  நெல்லித்தோப்பு தொகுதியில் வீடு, வீடாக 2 கிலோ சர்க்கரை வழங்கி நன்றி தெரிவித்த நாராயணசாமி
  X

  நெல்லித்தோப்பு தொகுதியில் வீடு, வீடாக 2 கிலோ சர்க்கரை வழங்கி நன்றி தெரிவித்த நாராயணசாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லித்தோப்பு தொகுதியில் வீடு, வீடாக சென்று 2 கிலோ சரக்கரை வழங்கி முதல்-அமைச்சர் நாராயணசாமி நன்றி தெரிவித்தார்.
  புதுச்சேரி:

  புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதும் நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் திறந்த ஜிப்பில் சென்று நன்றி தெரிவித்தார்.

  இந்நிலையில் தொகுதியில் வீடு, வீடாக சென்று நன்றி தெரிவிக்கும் பணியை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கினார். முதல் முதலாக தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தந்த வெண்ணிலாநகர் பகுதியில் வீடு, வீடாக சென்று நாராயணசாமி நன்றி தெரிவித்தார். அப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் 2 கிலோ சர்க்கரை வழங்கி, மக்களின் கோரிக்கைகளையும் கேட்டு அறிந்தார். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் நாராயணசாமி உறுதி அளித்தார்.

  முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் அமைச்சர் கந்தசாமி, புதுவை அரசு டெல்லி பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்காதரன், மூர்த்தி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், வட்டார தலைவர் பழனி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

  தொடர்ந்து நெல்லித்தோப்பு முழுவதும் சென்று நாராயணசாமி சர்க்கரை வழங்கி நன்றி தெரிவித்தார்.

  Next Story
  ×