என் மலர்

  செய்திகள்

  ராஜபாளையம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை: மனைவி உள்பட 4 பேர் கைது
  X

  ராஜபாளையம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை: மனைவி உள்பட 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜபாளையம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

  ராஜபாளையம்:

  ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கிருஷ்ணாபுரம், விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் தளவாய் வேல்தம்பி (வயது 37). இவரது மனைவி மகேஸ்வரி (33). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

  தளவாய் வேல்தம்பி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மகேஸ்வரி கோபித்துக் கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

  தன் மனைவியை அழைப்பதற்காக நேற்று மாலை 6 மணி அளவில் தளவாய்வேல்தம்பி, தன் அண்ணன் திப்பு சுல்தானுடன் சென்றார். அப்போது வீட்டில் இருந்த மனைவி மகேஸ்வரி, இவரது தாயார் பூமாரி, அண்ணன்கள் சுரேஷ், அய்யனார் ஆகிய 4 பேரும் வீட்டில் இருந்தனர்.

  வீட்டுக்குள் சென்ற தளவாய்வேல்தம்பி சமதானம் படுத்தி அழைத்தார். ஆனால் மகேஸ்வரி செல்ல மறுத்தார். இதனால் வீட்டுக்குள் வைத்தே கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரி, பூமாரி, சுரேஷ் ஆகிய 3 பேரும் தளவாய் வேல்தம்பியின் கை, கால்களை பிடித்துக் கொள்ள, அய்யனார் அரிவாளால் கழுத்தை அருத்தார். தளவாய் வேல் தம்பியின் அலரல் சத்தம் கேட்டு அவரது அண்ணன் திப்புசுல்தான் வீட்டுக்குள் வந்து பார்க்கும் போது தளவாய் வேல்தம்பி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

  இதுகுறித்து தளவாய் வேல்தம்பியின் தாயார் பொன்னுபாப்பா சேத்தூர் புறநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து தளவாய்வேல் தம்பியின் மனைவி மகேஸ்வரி, மாமியார் பூமாரி, மைத்துனர்கள் சுரேஷ், அய்யனார் ஆகிய 4 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×