என் மலர்

  செய்திகள்

  திருச்சியில் 8 பேரை கொன்ற சைக்கோ கொலையாளி சப்பாணி குண்டர் சட்டத்தில் கைது
  X

  திருச்சியில் 8 பேரை கொன்ற சைக்கோ கொலையாளி சப்பாணி குண்டர் சட்டத்தில் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சியில் 8 பேரை கொலை செய்த வழக்கில் கொலையாளி சப்பாணியை திருவெறும்பூர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
  திருச்சி:

  திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சப்பாணி (வயது36). இவர் வேங்கூரை சேர்ந்த தங்கதுரை என்பவரை பணம் மற்றும் நகைக்காக ஆசைப்பட்டு கொலை செய்து புதைத்தார்.

  இந்த வழக்கில் திருவெறும்பூர் போலீசார் சப்பாணியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தனது தந்தை தேக்கன் உள்பட மேலும் 7 பேரை கொலை செய்து புதைத்ததும் தெரியவந்தது. மொத்தம் 8 பேரை கொலை செய்த வழக்கில் கைதான சப்பாணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  அவர் மீதான வழக்குகள் திருச்சி கோர்ட்டு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 6-ல் நடந்து வருகிறது. சப்பாணி கொலை செய்து புதைத்ததில் சத்தியநாதன், குமரேசன், தேக்கன், விக்டர் விஜய், கோகிலா ஆகியோரது உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. கொலையான பெரியசாமி மற்றும் அற்புதசாமி ஆகியோரது சடலங்களை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. கைப்பற்றப்பட்ட உடல்களை அடையாளம் காண்பதற்காக மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டன.

  இந்த நிலையில் சப்பாணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து சப்பாணியை குண்டர் சட்டத்தில் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×