search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோயர்பாயிண்ட் பகுதியில் இயற்கை அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
    X
    மோயர்பாயிண்ட் பகுதியில் இயற்கை அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

    கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையால் லாட்ஜூகள், ஓட்டல்களில் கூட்டம் நிரம்பியுள்ளது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடும் பனி காரணமாக கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்து வந்தது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறையால் கொடைக்கானலுக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர்.

    இதனால் பிரையண்ட் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, மோயர்பாய்ண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு தூண்பாறை போன்ற இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    சுற்றுலா பயணிகளின் வருகையால் லாட்ஜூகள், ஓட்டல்களில் கூட்டம் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள டாக்சி ஓட்டுனர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், வழிகாட்டிகள் உள்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கொடைக்கானலில் உறை பனி காரணமாக புல்வெளியில் பனித்துளிகள் உறைந்து போயிருப்பதை படத்தில் காணலாம்.

    கொடைக்கானலில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அப்சர் வேட்டரி, ஏரிச்சாலை, ஜிம்கானா மற்றும் கீழ்பூமி பகுதிகளில் உறைபனி பொழிந்தது. புற்களின் மீது பனிக்கட்டிகள் படிந்திருந்தன. இரவு நேரத்தில் கடும் பனியும், பகலில் குளிர்காற்றும் வீசி வருகிறது.

    இதனால் முதியோர்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
    Next Story
    ×