என் மலர்

  செய்திகள்

  மொட்டை போட்ட அ.தி.மு.க.வினர்.
  X
  மொட்டை போட்ட அ.தி.மு.க.வினர்.

  ஜெயலலிதா மறைவு கொடைக்கானலில் அ.தி.மு.க.வினர் 50 பேர் மொட்டை போட்டனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் 50 அ.தி.மு.க.வினர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.
  மன்னவனூர்:

  முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  தமிழகம் முழுவதும் பல ஊர்களில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் முதல்வர் மறைவை தாங்க முடியாமல் தங்கள் வீட்டு துக்கம் போல் அனுசரித்து வருகின்றனர்.

  கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் இதுபோல் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். மன்னவனூர், வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வாழைக்காட்டுஓடை, கிரஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் உருவ படத்தை வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று அங்குள்ள சுடுகாட்டில் புதைத்தனர்.

  மேலும் அ.தி.மு.க. தொண்டர்கள் 50 பேர் மொட்டை அடித்து மறைந்த முதல்வருக்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.  Next Story
  ×