என் மலர்

  செய்திகள்

  பழனி லாட்ஜில் தூக்கில் பிணமாக தொங்கிய கேரள கள்ளக்காதல் ஜோடி
  X

  பழனி லாட்ஜில் தூக்கில் பிணமாக தொங்கிய கேரள கள்ளக்காதல் ஜோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனி லாட்ஜில் கேரள கள்ளக்காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பழனி:

  கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள உளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனுராஜா. அவரது மனைவி ஷோபி. 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மாகி ஆஸ்மா (வயது 7) என்ற குழந்தை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை எழுந்தது. எனவே கணவனை விவாகரத்து செய்த ஷோபி தனது பாட்டியுடன் வசித்து வந்தார்.

  அப்போது அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான சுனில்குமார் (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகினர். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. எனவே கள்ளக்காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறினர்.

  காரில் பழனிக்கு வந்தனர். அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். மலைக்கோவிலுக்கு சென்ற சுனில்குமார் மொட்டை போட்டக் கொண்டார். பின்னர் இருவரும் சாமி தரிசனம் செய்து விட்டு லாட்ஜூக்கு திரும்பினார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் பழனி அடிவாரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

  தகவல் அறிந்த போலீசார் லாட்ஜ் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது 2 பேரும் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×