என் மலர்

  செய்திகள்

  சுங்கச்சாவடியில் வங்கி கார்டுகள் மூலம் பணம் செலுத்த அனுமதி: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
  X

  சுங்கச்சாவடியில் வங்கி கார்டுகள் மூலம் பணம் செலுத்த அனுமதி: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சில்லரை தட்டுப்பாட்டை போக்குவதற்காக வங்கி கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  உளுந்தூர்பேட்டை:

  கடந்த 8-ந் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையால் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி வாகனங்கள் சென்றுவந்தன.

  இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  வாகன ஓட்டிகள் பெரும்பான்மையானோர் சரியான சில்லரை கொடுத்து ரசீது பெற்று சென்றனர். ஒருசிலர் 2000 ரூபாயை கொடுத்தனர். அதற்கு சுங்கச்சாவடி அதிகாரிகள் சில்லரை இல்லை எனவே நீங்கள் சில்லரையாக கொடுங்கள் என்று கேட்டனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாகன ஓட்டிகளை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். மேலும் சில்லரை தட்டுப்பாட்டை போக்குவதற்காக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வங்கி கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறும்போது, சுங்கச்சாவடிகளில் வங்கி கார்டு பயன்படுத்தும்முறை மிக எளிதாக உள்ளது. நாங்களும் சில்லரைக்கு காத்திருக்க வேண்டியது இல்லை. இப்போது பண தட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில் இந்த முறை எங்களுக்கு பயன்தரும் என்றார்.
  Next Story
  ×