என் மலர்

  செய்திகள்

  வல்லூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி பாதிப்பு
  X

  வல்லூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வல்லூர் அனல்மின் நிலையத்தில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாய் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
  பொன்னேரி:

  தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக மீஞ்சூர் அருகேயுள்ள வல்லூரில் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

  கடந்த வாரம் முதல் அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது.

  இந்த நிலையில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாய் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இரண்டாம் அலகில் ஏற்பட்டுள்ள கொதிகலன் குழாய் பழுது சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

  வல்லூர் அனல் மின் நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி திறனான 1500 மெகாவாட் மின் உற்பத்தியில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தற்போது முதல் மற்றும் மூன்றாம் அலகில் மட்டுமே 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

  Next Story
  ×