என் மலர்

  செய்திகள்

  திண்டுக்கல் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியார் குண்டர் சட்டத்தில் கைது
  X

  திண்டுக்கல் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியார் குண்டர் சட்டத்தில் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியார் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகில் உள்ள என்.பஞ்சம்பட்டியில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் உதவி பங்கு தந்தையாக அந்தோணி கிஷோர் (வயது32) என்பவர் இருந்தார்.

  சர்ச்சுக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு பியானோ கற்று தருவதாக கூறி நெருங்கி பழகினார்.

  பின்னர் காதலிப்பதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கினார். இந்த விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

  போலீசார் அந்தோணி கிஷோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

  கலெக்டர் வினய் உத்தரவின்பேரில் பாதிரியார் அந்தோணிகிஷோர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

  Next Story
  ×