search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி இறந்த சிறுத்தை
    X
    மின்சாரம் தாக்கி இறந்த சிறுத்தை

    தேனி அருகே பெரியாறு புலிகள் சரணாலயத்தில் மின்சாரம் தாக்கி சிறுத்தை பலி

    தேனி அருகே பெரியாறு புலிகள் சரணாலயத்தில் மின்சாரம் தாக்கி சிறுத்தை பலியானது.
    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் 925 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது பெரியாறு புலிகள் சரணாலயம். இந்த சரணாலய பகுதியில் மேற்கு டிவிசன் பம்பா ரேஞ்சுக்கு உட்பட்ட 4-ம் மைல் பகுதியில் கேரள வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது அப்பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. அதை கைப்பற்றிய வனத்துறையினர் சோதனையில் அது 10 வயதுடைய ஆண் சிறுத்தை என்றும மின்சாரம் தாக்கி பலியாகியிருந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் குடியிருப்பு பகுதியான வல்லக்கடவில் இருந்து 12 கி.மீ தொலைவில் புலிகள் சரணாலயம் வழியாக பச்சகாணம் என்னும் இடத்தில் உள்ள தனியார் தோட்டத்துக்கு 11 கே.வி மின்சார லைன் கொண்டு செல்லப்பட்டதும் அந்த மின்சாரம் தாக்கியதில் சிறுத்தை இறந்ததும் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைக்குழுவினரின் மேற்பார்வையில் குமுளியில் உள்ள ராஜீவ்காந்தி வன விலங்கு ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

    இது தொடர்பாக மின்வாரிய செயற்பொறியாளருக்கு எதிராக கேரள வனத்துறை வழக்கு பதிவு செய்தது.
    Next Story
    ×