search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேட்பு மனுக்களில் திருத்தம் செய்ய முயற்சி: வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் முற்றுகை
    X

    வேட்பு மனுக்களில் திருத்தம் செய்ய முயற்சி: வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் முற்றுகை

    வாணியம்பாடி நகராட்சியில் தி.மு.க.வினரின் வேட்பு மனுக்களில் அ.தி.மு.க.வினர் திருத்தம் செய்ய முயன்றதாக தி.மு.க. உள்பட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    வாணியம்பாடி, அக்.4-

    வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அந்த வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிக்கு மனுதாக்கல் நிறைவு நாளான நேற்று அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் இரவு 7 மணியளவில் தி.மு.க.வினரின் வேட்புமனுக்களை, அ.தி.மு.க.வினர் எடுத்துப் பார்த்ததாக கூறப்படுகிறது. அதனை கவனித்த தி.மு.க.வினர், அ.தி.மு.க.வினரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளும் நடந்தது. தி.மு.க.வினரின் வேட்பு மனுக்களில் அ.தி.மு.க.வினர் திருத்தம் செய்ய முயன்றதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அதை தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நகராட்சி அலுவலகம் எதிரே திரண்டனர். அவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் இரவு 7.30 மணியில் இருந்து தொடர்ந்து நீடித்தது. இந்த முற்றுகை போராட்டத்தால் வாணியம்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்படவில்லை. போராட்டம் நீடித்தது.

    அதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் சமரசம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். * * * வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தை தி.மு.க. உள்பட எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    Next Story
    ×