search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஜெயலலிதாவை பார்ப்பதற்காக காத்துக்கிடக்கும் மாற்றுத்திறனாளி
    X

    அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஜெயலலிதாவை பார்ப்பதற்காக காத்துக்கிடக்கும் மாற்றுத்திறனாளி

    முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து வீடு திரும்புவதை பார்த்த பிறகுதான் நான் எனது வீட்டுக்கு திரும்புவேன் என மாற்றுத்திறனாளி கூறியுள்ளார்.
    சென்னை:

    முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22–ந் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன்பு நின்றுகொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் போலீசாரிடம் முதல்–அமைச்சரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து செல்கின்றனர்.

    இந்த கூட்டத்துக்கு மத்தியில், விழுப்புரத்தைச் சேர்ந்த எம்.ஏ.பி.எட் படித்த மணிவண்ணன் (வயது 30) என்ற மாற்றுத்திறனாளி கடந்த மாதம் 23–ந் தேதி முதல் ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் அருகே சாலையோரம் பிரார்த்தனை செய்தபடி சோகமாக அமர்ந்திருந்ததை காணமுடிந்தது. இரவும், பகலும் ஆஸ்பத்திரியே கதி என காத்துக் கிடக்கிறார்.

    அவர் கூறுகையில், ‘‘முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து வீடு திரும்புவதை பார்த்த பிறகுதான் நான் எனது வீட்டுக்கு திரும்புவேன். அதுவரை இங்கேதான் இருப்பேன். அவர் பூரண உடல்நலம் பெற தொடர்ந்து நான் பிரார்த்தனை செய்வேன்’’ என்றார்.

    Next Story
    ×