search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்?: மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி
    X

    மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்?: மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி

    சவூதி அரேபியாவில் தவிக்கும் 62 மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து நாளை பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை பகுதியை சேர்ந்த திருமுருகன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் 62 மீனவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சவூதி அரேபியா சென்றனர். அங்கு அவர்களுக்கு சரியாக சாப்பாடு கொடுக்கப்படவில்லை.

    மேலும் ஊதியமின்றி துன்புறுத்தப்படுகின்றனர். எனவே அவர்களை மீட்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு பலமுறை விசாரணைக்கு வந்தபோதும், மத்திய அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டு வந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஏன்? காலதாமதம் செய்கின்றன. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை ஐகோர்ட்டில் நாளை தெரிவிக்க வேண்டும். தெரிவிக்காத பட்சத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டி வரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×