என் மலர்

  செய்திகள்

  தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூர கொலை: கள்ளக்காதலிடம் போலீசார் விசாரணை
  X

  தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூர கொலை: கள்ளக்காதலிடம் போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலையில் கல்லை போட்டு தொலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேட்டுப்பாளையம்:

  மேட்டுப்பாளையம் குரும்பனூர் பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது 32). ஒர்க்ஷாப் தொழிலாளி.. இவருக்கும் அதே பகுதியை அன்புக்கரசி (வயது 26) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் ஏற்பட்டது. அன்புக்கரசிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு சபரீசன் (4) என்ற மகன் உள்ளான்.

  கடந்த 2½ ஆண்டுகளாக அன்புக்கரசியுடன் விமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

  இந்நிலையில் விமலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு அன்புக்கரசியிடம் தகராறு செய்தததாக கூறப்படுகிறது.

  அன்புக்கரசியின் நடத்தையில் விமலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

  நேற்றும் விமல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போதும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இருவரும் சமாதானமாகி விட்டனர்.

  இன்று காலை அன்புக்கரசி எழுந்துபார்த்தபோது விமல் முகம் சிதைந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்.

  இது குறித்து அன்புக்கரசி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

  தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி, பெரியநாயக்கன் பாளையம் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  விமலை அவரது கள்ளக்காதலியே தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தாரா? அல்லது வேறு நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொலை செய்து விட்டு தப்பினரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  தலையில் கல்லை போட்டு தொலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×