என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 14-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.

    • ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

    சில்ஹெட்:

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் 20-ந் தேதி தொடங்கியது.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 56 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே தரப்பில் வெல்லிங்டன் மசகட்சா மற்றும் முசரபானி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 82 ரன்கள் முன்னிலை பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 59 ரன்களும், பிரையன் பென்னெட் 57 ரன்களும் அடித்தனர். வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 82 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 60 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் ஜிம்பாப்வே அணி 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 54 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

    • விளையாட்டுல வெற்றி, தோல்வி எல்லாருக்கும் இருக்கும்.
    • மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள்.

    2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மிகவும் சிக்கலானதாக உள்ளது.

    இந்நிலையில் 2010-ல் இதேபோல தொடர் தோல்விகளை சந்தித்து இறுதியில் கோப்பையை வென்றோம் என சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தோல்விக்கு காரணமே கிடையாது சார். இது Game. விளையாட்டுல வெற்றி, தோல்வி எல்லாருக்கும் இருக்கும். வெற்றி பெறும்போது பாராட்டுறீங்க. தோற்றுவிட்டால் நல்லா பண்ணலனு சொல்றீங்க. சரியா ஆடல என்பது உண்மைதான்.

    அதை சரி செய்ய முயற்சி பண்ணிட்டு இருக்கோம். 2010-ல் இதேபோல தொடர் தோல்விகளை சந்தித்து இறுதியில் கோப்பையை வென்றோம். அதனால், மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    என காசிவிஸ்வநாதன் கூறினார்.

    • பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலியாகினர்.
    • வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்க உள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில், ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற உள்ள மும்பை - ஐதராபாத் இடையிலான லீக் ஆட்டத்தின் போது பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த போட்டியின் போது, சியர்லீடர்கள் நடனமாடக்கூடாது எனவும், பட்டாசுகள் வெடிக்கக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • ஆண்டுதோறும் சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும்.
    • இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'கிரிக்கெட் உலகின் பைபிள்' என்று போற்றப்படும் 'விஸ்டன்' புத்தகம் ஆண்டுதோறும் சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும். இதில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    இதன்படி 2025-ம் ஆண்டு பதிப்பில் இடம் பெறும் சிறந்த 5 வீரர், வீராங்கனைகள் யார் என்பதை 'விஸ்டன்' வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

    31 வயதான பும்ரா கடந்த ஆண்டில் (2024) டெஸ்ட் கிரிக்கெட்டில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதில் சராசரியாக 14.92 ரன்னுக்கு ஒரு விக்கெட் சாய்த்து இருந்தார். ஒரு சீசனில் இவ்வளவு குறைவான ரன் சராசரியுடன் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக பும்ரா திகழ்கிறார் என விஸ்டன் பாராட்டி இருக்கிறது. அத்துடன் அவர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர்நாயகன் விருதை கைப்பற்றியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    28 வயதான மந்தனா கடந்த ஆண்டில் மூன்று வடிவிலான போட்டியிலும் சேர்த்து 1,659 ரன்கள் குவித்தார். இது, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் வீராங்கனை ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன், விக்கெட் கீப்பர் ஜாமி சுமித், இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் ஆகியோரின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    • இன்றைய ஐபிஎல் போட்டியின்போது மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ அறிவிப்பு
    • வீரர்கள், நடுவர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியின்போது மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்த போட்டியின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீரர்கள், நடுவர்கள் கையில் கறுப்பு பட்டை அணிவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நேற்று மாலை நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாதனை வீரரான ரிஷப்பண்ட் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
    • லக்னோ அணியின் கேப்டனான அவர் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 7-வது வீரராக களம் இறங்கினார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாதனை வீரரான ரிஷப்பண்ட் தொடர்ந்து சொதப்பி வருகிறார். லக்னோ அணியின் கேப்டனான அவர் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 7-வது வீரராக களம் இறங்கினார். 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அடைந்தார்.

    தனது பேட்டிங் மோசமாக இருப்பதால் ரிஷப் பண்ட் வழக்கமான 4-வது வரிசையில் ஆடாமல் 7-வது வரிசையில் கடைசியாக வந்தார். இது அவரை மேலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருந்தது.

    தோல்வி தொடர்பாகவும், 7-வது வீரராக ஆடியது பற்றியும் ரிஷப்பண்ட் கூறியதாவது:-

    நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்தோம். டாஸ் முக்கிய பங்கு வகித்தது. ஆடுகளம் எப்போதுமே 2-வது களம் இறங்குபவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. லக்னோ பிட்சில முதலில் பேட்டிங் செய்யும் போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், 2-வது இன்னிங்சின் போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது.

    இந்த ஆட்டத்திலும் அதே நிலைதான் ஏற்பட்டது. இதற்காக நாம் சாக்குப் போக்கு சொல்ல முடியாது. ஆனால் அதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    7-வது வரிசையில் நான் ஆடுவதற்கு காரணம் இருக்கிறது. அப்துல் சமத்தை முன்கூட்டியே களம் இறக்க முடிவு செய்தோம். அதன் பிறகு மில்லர் வந்தார். அதனால்தான் 7-வது இடத்தில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் சிறந்த லெவனை கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு ரிஷப்பண்ட் கூறினார்.

    5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளியுடன் 5-வது இடத்தில் இருக்கும் லக்னோ அணி தனது 10-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 27-ந் தேதி சந்திக் கிறது.

    • 5 முறை சாம்பியனான மும்பை அணி 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறது.
    • அதிரடி வீரர்கள் நிறைந்த இந்த ஆட்டத்தில் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணிக்கு இந்த சீசன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. ராஜஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 286 ரன்கள் குவித்து மலைக்க வைத்த அந்த அணி, அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் (லக்னோ, டெல்லி, கொல்கத்தா, குஜராத்துக்கு எதிராக) தோல்வியை தழுவியது. 6-வது ஆட்டத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. முந்தைய ஆட்டத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. 200 ரன்னுக்கு மேல் எடுத்த இரு ஆட்டங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணி, அதற்கு குறைவாக ரன் எடுத்த ஆட்டங்களில் தேறவில்லை.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (242 ரன்), அபிஷேக் ஷர்மா (232), ஹென்ரிச் கிளாசென் (210), இஷான் கிஷன், நிதிஷ்குமார் என்று அதிரடி சூரர்களுக்கு குறைவில்லை. அவர்கள் நிலையான திறனை வெளிப்படுத்த தவறுவதால் தான் அந்த அணி தகிடுதத்தம் போடுகிறது. பந்து வீச்சும் பாராட்டும் வகையில் இல்லை. ஹர்ஷல் பட்டேல், கேப்டன் கம்மின்ஸ், முகமது ஷமி, இஷான் மலிங்கா, ஜீஷன் அன்சாரி ஓரளவு நன்றாக வீசுகிறார்கள்.

    5 முறை சாம்பியனான மும்பை அணி 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறது. முதல் 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற அந்த அணி அதன் பிறகு எழுச்சி கண்டு 3 ஆட்டங்களில் (டெல்லி, ஐதராபாத், சென்னைக்கு எதிராக) தொடர்ச்சியாக வெற்றி பெற்று வீறுநடை போடுகிறது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (333 ரன்), திலக் வர்மா (231), ரையான் ரிக்கெல்டன் (204) நல்ல நிலையில் உள்ளனர். பார்மின்றி தவித்த தொடக்க வீரர் ரோகித் சர்மா ஒரு வழியாக சென்னைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 76 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தார். பந்து வீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் சான்ட்னெர் கலக்குகிறார்கள்.

    மும்பைக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், அவர்களின் வெற்றிப்பயணத்துக்கும் முட்டுக்கட்டை போட ஐதராபாத் அணி வரிந்து கட்டுகிறது. அதிரடி வீரர்கள் நிறைந்த இந்த ஆட்டத்தில் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர் அல்லது அதர்வா டெய்ட், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி, இஷான் மலிங்கா அல்லது வியான் முல்டெர்.

    மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, அஷ்வனி குமார்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல். ராகுலுக்கு கைக்கொடுத்து பேச முயன்றார்.
    • கோயங்காவிடம் பேச விரும்பாத ராகுல் அவருக்கு கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல். ராகுலுக்கு கைக்கொடுத்து பேச முயன்றார். ஆனால் அவரிடம் பேச விரும்பாத ராகுல் உடனடியாக அவருக்கு கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    கடந்தாண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.

    இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. மைதானத்தில் வைத்தே தன்னை அவமானப்படுத்திய பழைய அணியின் உரிமையாளரிடம் பேச விரும்பாமல் தான் கே.எல். ராகுல் அவருக்கு உடனடியாக கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார் என்று நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    • சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார்.
    • 130 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த சாதனையை கே.எல். ராகுல் படைத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்து வார்னரின் சாதனையை கே.எல். ராகுல் முறியடித்துள்ளார். 130 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல் :

    1. கே.எல். ராகுல் - 130 இன்னிங்ஸ்

    2. டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ்

    3. விராட் கோலி - 157 இன்னிங்ஸ்

    4. ஏபி டிவில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ்

    5. ஷிகர் தவான் - 168 இன்னிங்ஸ்

    • டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • டெல்லி அணியில் ராகுல் மற்றும் அபிஷேக் போரல் அரை சதம் அடித்தனர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அபிஷேக் போரல் 51 ரன்களும், கருண் நாயர் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல் மற்றும் படேல் சிறப்பாக ஆடினர்.


     ராகுல் 42 பந்துகளில் 57 ரன்களும், படேல் 20 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

    இறுதியில் டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    • 18.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2-வது இடத்தில் உள்ளது.
    • 17 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன.

    இதன்காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 19 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்சிபி அணி படைத்துள்ளது. 

    அந்த அணிக்கு அடுத்தபடியாக 18.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2-வது இடத்திலும், 17 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    ×