என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஊக்கமருந்து விவகாரத்தில் உங்களுக்கு தடை விதிக்கப்பட்டால், அதனை தனிப்பட்ட பிரச்னை எனக் கூற மாட்டேன்.
- ஊக்கமருந்து வழங்கியவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதில் வெளிப்படை தன்மை வேண்டும்.
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவர் ககிசோ ரபாடா. இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார்.
இந்த நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தியன் காரணமாக தனக்கு அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் தனது செயலுக்காக வருந்துவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ரபாடா ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும், இது தொடர்பான முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது மிகவும் கேவலமானது. தனிப்பட்ட காரணங்கள் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு விஷயத்தை மறைப்பதற்காக முயற்சி செய்வது தனிப்பட்ட பிரச்னை கிடையாது. நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருக்கிறீர்கள். ஒரு தொடரின்போது, ஊக்கமருந்து விவகாரத்தில் உங்களுக்கு தடை விதிக்கப்பட்டால், அதனை தனிப்பட்ட பிரச்னை எனக் கூற மாட்டேன். நீங்கள் உங்களது ஒப்பந்தத்தை மீறியுள்ளீர்கள் என்றே கூறுவேன். இது தனிப்பட்ட பிரச்னை கிடையாது.
ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதால் தடை விதிக்கப்பட்டது என்றால், அவர் என்ன மாதிரியான ஊக்கமருந்து எடுத்துக் கொண்டார். எப்போது அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கு எவ்வாறு ஊக்கமருந்து கிடைத்தது. ஊக்கமருந்து வழங்கியவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதில் வெளிப்படை தன்மை வேண்டும்.
என டிம் பெய்ன் கூறினார்.
- ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- டெல்லி அணியில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 41 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்- டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கருண் நாயர்- டுபிளிசிஸ் களமிறங்கினர்.
பேட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் கருண் நாயர் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அவர் வீசிய 2-வது ஓவரில் டுபிளிசிஸ் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து வந்த போரல் 8, கேப்டன் அக்சர் படேல் 6, கேஎல் ராகுல் 10 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் டெல்லி அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ்- விப்ராஜ் நிகம் ஜோடி சிறிது நேரம் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனால் தேவையில்லாமல் இந்த ஜோடி ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். விப்ராஜ் 18 ரன்னில் அவுட் ஆகினர்.
இதனை தொடர்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் இம்பெக்ட் பிளேயர் அஷுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 50+ ரன்களை குவித்தது.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- டெல்லி அணி 10 ஓவர்களில் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
- ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்- டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கருண் நாயர்- டுபிளிசிஸ் களமிறங்கினர்.
பேட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் கருண் நாயர் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அவர் வீசிய 2-வது ஓவரில் டுபிளிசிஸ் (3) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த போரல் விக்கெட்டையும் கம்மின்ஸ் வீழ்த்தி அசத்தினார். இதனை தொடர்ந்து வந்த கேப்டன் அக்சர் படேல் 6 ரன்னில் வெளியேறினார்.
பொறுமையாக விளையாடிய கேஎல் ராகுல் 14 பந்துகள் சந்தித்து 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணி தடுமாறி வருகிறது.
இதுவரை டெல்லி அணி 10 ஓவர்களில் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- அவர் எப்போதுமே கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக நீங்கள் உணர்வீர்கள்.
- ஆனால் இம்முறை அவர் அப்படி இருப்பது போல் தெரியவில்லை.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தடுமாறி வருகிறார். லக்னோ அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றி 6 தோல்விகளை சந்தித்துள்ளது.
இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் 27 கோடிக்காக வாங்கப்பட்டதால் கட்டாயம் அசத்த வேண்டும் என்ற அழுத்தமே ரிஷப் பண்ட் திறமை இருந்தும் தடுமாற்றக் காரணம் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரிஷப் பண்ட் விளையாடுவதைப் பார்க்கும் போது அவர் எப்போதுமே கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இம்முறை அவர் அப்படி இருப்பது போல் தெரியவில்லை. அவர் சிரித்து, மகிழ்ந்து, ரிலாக்ஸாக, மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடியவில்லை.
ஒருவேளை அது கேப்டன்ஷிப் பொறுப்பால் இருக்கலாம். புதிய அணிக்கு உச்சபட்ச சம்பளத் தொகையுடன் வந்துள்ளதும் காரணமாக இருக்கலாம். அவர் தன்னுடைய உண்மையான குண நலனை வெளிப்படுத்துவதாகவும் தெரியவில்லை. அதையும் தாண்டி அவரிடம் ஸ்பார்க் இருப்பதைப் பார்க்க முடியவில்லை. இயற்கையாகவே அவர் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களைப் பொழுது போக்கக்கூடியவர். இயற்கையாகவே துடிப்பான பாடி லாங்குவேஜ் கொண்டவர். இருப்பினும் கடந்த 10 - 11 போட்டிகளாகவே அவரை பார்த்து வருகிறேன். அவரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது.
என்று கில்கிறிஸ்ட் கூறினார்.
- டெல்லி அணி 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.
- ஐதராபாத் அணி 10 ஆட்டங்களில் 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தில் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணி 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்றை எட்டுவதற்கு மீதமுள்ள 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றாக வேண்டும்.
ஐதராபாத் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி (3 வெற்றி, 7 தோல்வி) 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, ரன்ரேட்டை வலுப்படுத்தி, மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே ஐதராபாத்துக்கு பிளே-ஆப் கதவு திறக்கும்.
- பயிற்சியின் போது ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- மாற்று வீரராக ஆல் ரவுண்டர் ஹர்ஷ் தூபேவை சன்ரைசர்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் இன்று நடைபெறும் 55-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடக்கவுள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆடம் ஜாம்பா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில் ஸ்மாறன் ரவிச்சந்திரன் மாற்று வீரர்காக தேர்வுசெய்யப்பட்டார்.
பயிற்சியின் போது ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து அவருக்கு பதிலாக, உள்ளூர் போட்டிகளில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் ஆல் ரவுண்டர் ஹர்ஷ் தூபேவை சன்ரைசர்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஹர்ஷ் தூபே இதுவரை 16 டி20, 20 லிஸ்ட் ஏ மற்றும் 18 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பந்துவீச்சில் 127 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 941 ரன்களையும் சேர்த்து அசத்தியுள்ளார்.
- சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
- உர்வில் படேலை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
கொல்கத்தா:
ஐபிஎல் தொடர் கிட்டதட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் முதல் இடத்தில் ஆர்சிபி அணியும் கடைசி இடத்தில் சென்னை அணியும் உள்ளது.
கடந்த 3-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி பெற்றது.
சென்னை அணி அடுத்த போட்டியில் நாளை மறுநாள் கொல்கத்தா அணியுடன் மோதுகிறது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது .
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் வான்ஷ் பேடி ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். இடது கணுக்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காரணமாக விலகியுள்ள வான்ஷ் பேடிக்கு பதிலாக உர்வில் படேலை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

உர்வில் படேல்- வான்ஷ் பேடி
உர்வில் படேல், சையத் முஷ்டாக் அலி டிராபியில் திரிபுராவுக்கு எதிராக வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்தியரின் வேகமான டி20 சதத்தை குஜராத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்டர் உர்வில் பதிவு செய்தார்.
அவர் 47 டி20 போட்டிகளில் விளையாடி 1162 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியில் இணைவார்.
- லக்னோ பவுலிங் அட்டாக்கை சமாளிக்க இங்கிலிஸை அனுப்புவது சரியாக இருக்கும் என்று அவர் கருதினார்.
- குறிப்பாக மயங் ஆரம்பத்திலேயே பவுலிங் செய்வார் என்று நாங்கள் கருதினோம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 54-வது போட்டியில் பஞ்சாப்- லக்னோ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 237 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்ததாக விளையாடிய லக்னோ 20 ஓவரில் 199/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் ஜோஸ் இங்கிலிஸை 3-வதாக களமிறக்கும் முடிவை ஷ்ரேயாஸ் ஐயர் எடுத்ததாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஜோஸ் இங்கிலிஸை 3-வதாக களமிறக்கும் முடிவை கேப்டன் எங்களிடம் கூறினார். இந்த பிட்ச்சில் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தால் லக்னோ பௌலிங் அட்டாக்கை சமாளிக்க இங்கிலிஸை அனுப்புவது சரியாக இருக்கும் என்று அவர் கருதினார். குறிப்பாக மயங் ஆரம்பத்திலேயே பவுலிங் செய்வார் என்று நாங்கள் கருதினோம். அவரது பந்துகள் பெரும்பாலும் ஷார்ட்டாக இருக்கும். அது போன்ற பந்துகளை எதிர்கொள்வதே ஜோஸ் இங்கிலிஸின் பலமாகும்.
அவர் அடித்த புல் ஷாட்டுகள் அபாரமாக இருந்தது. மேலும் அந்த முடிவு தங்களுடைய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட உதவியது. அந்த முடிவு லக்னோவுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்து பஞ்சாப் வெற்றிக்கான துவக்கத்தைக் கொடுத்தது.
என பாண்டிங் கூறினார்.
- டெஸ்ட் அணிக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் தொடர்கிறது.
- டெஸ்ட் அணிக்கான தரவரிசையில் இந்தியா 3-வது இடட்தில் உள்ளது.
ஆடவர் கிரிக்கெட் அணிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான பட்டியலில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. ஒருநாள் அணியின் தரவரிசை பட்டியலில் 124 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் டி20 அணியின் தரவரிசை பட்டியலில் 271 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்திலும் நீடிக்கிறது.
டெஸ்ட் அணிக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் தொடர்கிறது. இதில் இங்கிலாந்து அணி 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் ஒரு இடம் பின் தங்கி, 3, 4-வது இடங்களில் உள்ளது.
டி20 தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இலங்கை அணி 7-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றப்படி பெரிய அளவில் எந்த மாற்றமும் அணிகள் தரவரிசையில் இல்லை.
- இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளது.
- இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.
ஐபிஎல் தொடர் மே 25-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் செயல்படுவதாக முடிவாகி உள்ளது. மேலும் இந்த தொடருக்காக இந்திய அணியில் குல்தீப் யாதவ், கருண் நாயர் டெஸ்ட் அணியில் இடம் பெறவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டிந்தார். மேற்கொண்டு ரோகித் சர்மா பங்கேற்காத போட்டிகளுக்கு பும்ரா கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் அத்தொடாரின் கடைசி போட்டியின் போது கேப்டனாக செயல்பட்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா காயத்தை சந்தித்ததுடன் போட்டியில் இருந்தும் பாதியிலேயே வெளியேறினார்.
மேற்கொண்டு காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் அவர் தவறவிட்டார். அப்போதே பும்ரா தொடர்ந்து விளையாடியதன் காரணமாகவே காயத்தை சந்தித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான் இனிவரும் தொடர்களில் பும்ராவின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் அவரை அனைத்து போட்டிகளிலும் விளையாடவைப்பதற்கு பதிலாக முக்கிய ஆட்டங்களில் மட்டும் விளையாட பிசிசிஐ அனுமதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அவரை டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்கவுள்ளதாகவும் அதேசமயம் இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டுவரும் சுப்மன் கில்லை டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
- மொயீன் அலி ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்களை பராக் பார்க்கவிட்டார்.
- ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 6 பந்துகளை சிக்சருக்கு விளாசி பார்க் புதிய சாதனை படைத்துள்ளார்.
18-வது ஐ.பி.எல். ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார்.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 13-வது ஓவரை மொயீன் அலி வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்து அமர்க்களம் செய்தார். மேலும் அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தில் பராக் சிக்சர் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 6 பந்துகளை சிக்சருக்கு விளாசி பார்க் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு எக்ஸ் பக்கத்தில் ரியான் பராக் பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
பராக் அந்த பதிவில், "ஐபிஎல் தொடரில் ஒருநாள் என்னால் ஒரே ஓவரில் 4 சிக்சர் அடிக்க முடியும் என்று என்னுடைய உள்மனது சொல்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.
2023 ஆம் ஆண்டு பராக்கின் இந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். ஆனால் தற்போது இப்போது ஒரே ஓவரில் 5 சிக்சரும் தொடர்ந்து 6 பந்துகளில் 6 சிக்சரும் அடித்து தன்னை கிண்டலடித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
- சிறந்த அதிரடி பேட்ஸ் மேன்கள் இரு அணியிலும் உள்ளனர்.
- குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியின் 56-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-சுப்மன்கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி குஜராத்துக்கு பதிலடி கொடுத்து 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. மும்பை அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் (அகமதாபாத்) வித்தியாசத்தில் தோற்று இருந்தது. மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மும்பையை மீண்டும் வீழ்த்தி 8-வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவது குஜராத்துக்கு கடும் சவாலானது.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. சிறந்த அதிரடி பேட்ஸ் மேன்கள் இரு அணியிலும் உள்ளனர். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.






