என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vansh Bedi"

    • சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • உர்வில் படேலை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடர் கிட்டதட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் முதல் இடத்தில் ஆர்சிபி அணியும் கடைசி இடத்தில் சென்னை அணியும் உள்ளது.

    கடந்த 3-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி பெற்றது.

    சென்னை அணி அடுத்த போட்டியில் நாளை மறுநாள் கொல்கத்தா அணியுடன் மோதுகிறது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது .

    இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் வான்ஷ் பேடி ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். இடது கணுக்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காரணமாக விலகியுள்ள வான்ஷ் பேடிக்கு பதிலாக உர்வில் படேலை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. 

    உர்வில் படேல்- வான்ஷ் பேடி

    உர்வில் படேல், சையத் முஷ்டாக் அலி டிராபியில் திரிபுராவுக்கு எதிராக வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்தியரின் வேகமான டி20 சதத்தை குஜராத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்டர் உர்வில் பதிவு செய்தார்.

    அவர் 47 டி20 போட்டிகளில் விளையாடி 1162 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியில் இணைவார்.

    ×