என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    மும்பை அணியின் ஆதிக்கத்தை குஜராத் தடுத்து நிறுத்துமா?
    X

    மும்பை அணியின் ஆதிக்கத்தை குஜராத் தடுத்து நிறுத்துமா?

    • சிறந்த அதிரடி பேட்ஸ் மேன்கள் இரு அணியிலும் உள்ளனர்.
    • குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியின் 56-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-சுப்மன்கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி குஜராத்துக்கு பதிலடி கொடுத்து 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. மும்பை அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் (அகமதாபாத்) வித்தியாசத்தில் தோற்று இருந்தது. மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

    குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மும்பையை மீண்டும் வீழ்த்தி 8-வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவது குஜராத்துக்கு கடும் சவாலானது.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. சிறந்த அதிரடி பேட்ஸ் மேன்கள் இரு அணியிலும் உள்ளனர். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×