என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: டெல்லிக்கு எதிராக ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு
    X

    ஐபிஎல் 2025: டெல்லிக்கு எதிராக ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு

    • டெல்லி அணி 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.
    • ஐதராபாத் அணி 10 ஆட்டங்களில் 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அணி 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்றை எட்டுவதற்கு மீதமுள்ள 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றாக வேண்டும்.

    ஐதராபாத் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி (3 வெற்றி, 7 தோல்வி) 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, ரன்ரேட்டை வலுப்படுத்தி, மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே ஐதராபாத்துக்கு பிளே-ஆப் கதவு திறக்கும்.

    Next Story
    ×