என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

சீட்டுகட்டு போல் சரிவு.. 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாற்றம்
- டெல்லி அணி 10 ஓவர்களில் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
- ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்- டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கருண் நாயர்- டுபிளிசிஸ் களமிறங்கினர்.
பேட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் கருண் நாயர் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அவர் வீசிய 2-வது ஓவரில் டுபிளிசிஸ் (3) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த போரல் விக்கெட்டையும் கம்மின்ஸ் வீழ்த்தி அசத்தினார். இதனை தொடர்ந்து வந்த கேப்டன் அக்சர் படேல் 6 ரன்னில் வெளியேறினார்.
பொறுமையாக விளையாடிய கேஎல் ராகுல் 14 பந்துகள் சந்தித்து 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணி தடுமாறி வருகிறது.
இதுவரை டெல்லி அணி 10 ஓவர்களில் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.






