என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐதராபாத் மிரட்டல் பந்து வீச்சு- 133 ரன்னில் அடங்கிய டெல்லி
- ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- டெல்லி அணியில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 41 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்- டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கருண் நாயர்- டுபிளிசிஸ் களமிறங்கினர்.
பேட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் கருண் நாயர் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அவர் வீசிய 2-வது ஓவரில் டுபிளிசிஸ் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து வந்த போரல் 8, கேப்டன் அக்சர் படேல் 6, கேஎல் ராகுல் 10 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் டெல்லி அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ்- விப்ராஜ் நிகம் ஜோடி சிறிது நேரம் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனால் தேவையில்லாமல் இந்த ஜோடி ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். விப்ராஜ் 18 ரன்னில் அவுட் ஆகினர்.
இதனை தொடர்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் இம்பெக்ட் பிளேயர் அஷுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 50+ ரன்களை குவித்தது.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.






