என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஜோஸ் இங்கிலிஸை 3-வதாக களமிறக்கும் முடிவு வேற லெவல்- ஷ்ரேயாஸ் ஐயரை பாராட்டிய பாண்டிங்
    X

    ஜோஸ் இங்கிலிஸை 3-வதாக களமிறக்கும் முடிவு வேற லெவல்- ஷ்ரேயாஸ் ஐயரை பாராட்டிய பாண்டிங்

    • லக்னோ பவுலிங் அட்டாக்கை சமாளிக்க இங்கிலிஸை அனுப்புவது சரியாக இருக்கும் என்று அவர் கருதினார்.
    • குறிப்பாக மயங் ஆரம்பத்திலேயே பவுலிங் செய்வார் என்று நாங்கள் கருதினோம்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 54-வது போட்டியில் பஞ்சாப்- லக்னோ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 237 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்ததாக விளையாடிய லக்னோ 20 ஓவரில் 199/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் ஜோஸ் இங்கிலிஸை 3-வதாக களமிறக்கும் முடிவை ஷ்ரேயாஸ் ஐயர் எடுத்ததாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஜோஸ் இங்கிலிஸை 3-வதாக களமிறக்கும் முடிவை கேப்டன் எங்களிடம் கூறினார். இந்த பிட்ச்சில் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தால் லக்னோ பௌலிங் அட்டாக்கை சமாளிக்க இங்கிலிஸை அனுப்புவது சரியாக இருக்கும் என்று அவர் கருதினார். குறிப்பாக மயங் ஆரம்பத்திலேயே பவுலிங் செய்வார் என்று நாங்கள் கருதினோம். அவரது பந்துகள் பெரும்பாலும் ஷார்ட்டாக இருக்கும். அது போன்ற பந்துகளை எதிர்கொள்வதே ஜோஸ் இங்கிலிஸின் பலமாகும்.

    அவர் அடித்த புல் ஷாட்டுகள் அபாரமாக இருந்தது. மேலும் அந்த முடிவு தங்களுடைய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட உதவியது. அந்த முடிவு லக்னோவுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்து பஞ்சாப் வெற்றிக்கான துவக்கத்தைக் கொடுத்தது.

    என பாண்டிங் கூறினார்.

    Next Story
    ×