என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி சேர்க்கப்படுவதாக ஐசிசி அறிவித்தது.
    • இந்த கவுரவம் வாழ்வில் எப்போதும் பசுமையான நினைவாக நிலைத்திருக்கும் என தோனி கூறினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுத்தந்த ஒரே கேப்டன் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்சுக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 538 சர்வதேச போட்டிகளில் ஆடி 17,266 ரன்கள் எடுத்து இருப்பதுடன், விக்கெட் கீப்பிங்கில் 829 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்.

    இந்த நிலையில் 'ஹால் ஆப் பேம்' என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி சேர்க்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இது கிரிக்கெட்டில் தனது பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இந்த கவுரவம் வாழ்வில் எப்போதும் பசுமையான நினைவாக நிலைத்திருக்கும் என்றும் 43 வயதான தோனி கூறியுள்ளார்.

    இந்திய வீரர்களில் ஏற்கனவே பிஷன்சிங் பெடி, கபில்தேவ், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், கும்பிளே, வினோ மன்கட், ஷேவாக், சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில் ஐசிசின் Hall of Fame பட்டியலில் இணைக்கப்பட்ட தோனிக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருந்து 2011 உலக கோப்பையை சிக்ஸர் மூலம் வென்றது வரை அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் பதிந்துள்ளன. அமைதியான முறையில் அணியை வழிநடத்தி இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை வழங்கிய எம்.எஸ்.தோனிக்கு பொருத்தமான மரியாதை என எடப்பாடி கூறினார். 

    • 6-வது லீக் போட்டியில் புனேரி பப்பா- ராய்காட் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் புனேரி பப்பா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மகாராஷ்டிரா பிரீமியர் லீக் கடந்த ஜூன் 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்த தொடரின் 6-வது லீக் போட்டியில் புனேரி பப்பா- ராய்காட் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த புனேரி பப்பா 20 ஓவரில் 202 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ராய்காட் ராயல்ஸ் அணி 13.1 ஓவரில் 103 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் ஒரு வித்தியாசமான ரன் அவுட் செய்யப்பட்டது. அதன்படி முதல் ஓவரில் சித்தேஷ் வீர், லெக் திசையில் அடிப்பார். அது சரியாக பேட்டில் படாமல் கீப்பர் அருகில் செல்லும். இதனை கவனிக்காமல் பேட்ஸ்மேன் ஓட தொடங்குவார். உடனே எதிர் முனையில் இருந்த வீரர் ஹர்ஷ் மொகவீரா வேண்டாம் என குரல் கொடுப்பார்.

    உடனே சித்தேஷ், கிரீஸ்-க்கு உள்ளே வருவார். அப்போது கீப்பர் எறிந்த பந்து ஸ்டெம்பில் பட்டு பவுலர் திசையில் இருந்த ஸ்டெம்பிலும் பட்டுவிடும். இதில் யார் அவுட் என்பது குறித்து 3-வது நடுவரிடம் பரிசீலனைக்கு செல்லும். அப்போது எதிர் திசையில் இருந்த ஹர்ஷ் அவுட் என வந்தது.

    கீப்பர் திசையில் இருந்த ஸ்டெம்பில் பட்டு பவுலர் திசையில் இருந்த ஸ்டெம்பிலும் பட்டு வீரர் ரன் அவுட் ஆன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.
    • இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில் இறுதிப்போட்டி நடைபெறும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஆஸ்திரேலிய அணி பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த மைதானத்தில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய அணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட், 20-ம் தேதி லார்ட்ஸில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தோனி அனைத்து ஐசிசி கோப்பைகளையும், 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளார்.
    • தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த கௌரவத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

    இது தொடர்பாக ஐசிசி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஏபி டி வில்லியர்ஸ், ரிக்கி பாண்டிங், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல வீரர்கள் தொனியை புகழ்ந்து பேசியுள்ளனர்.

    அதில் பேசிய தினேஷ் கார்த்திக், "ஒட்டுமொத்த உலகம் இதுவரை கண்டதிலேயே தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராஃபி, டெஸ்டுக்கான GOLDEN MAZE என அனைத்து ஐசிசி கோப்பைகளையும், 5 ஐபிஎல் கோப்பைகளையும் அவர் வென்றுள்ளார். அனைத்தையும் அணியின் தலைவனாக முன்னின்று வென்றுள்ளார்" என்று தெரிவித்தார்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் மட்டும் தான் நடத்தப்பட்டு வருகிறது.
    • நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 11ஆம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் மட்டும் தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இறுதிப்போட்டி நடத்தும் இடம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியை ஒரே இடத்தில் நடத்துவதும் நல்லதுதான். அதே சமயம் கோப்பையை வெல்லும் அணியின் சொந்த நாட்டில், அடுத்த தொடருக்கான இறுதிப்போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வது சிறப்பான சாதனை தான் என்றாலும் 2023 இல் ஒருநாள் உலக கோப்பையை வென்றதை விடவும் அது கீழானது தான்" என்று கூறினார்.

    • நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.
    • நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடுத்தவர்களின் பட்டியலில் பூரன் தான் முதலிடத்தில் இருந்தார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

    அதிரடி ஆட்டக்காரனான நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்தாண்டு நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடுத்தவர்களின் பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் இருந்தார்.

    சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றநிலையில் IPL, CPL, MLC போன்ற FRANCHISE கிரிக்கெட் தொடர்களில் பூரன் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது

    • ஷ்ரேயாஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2020ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றார்.
    • 2024-ம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார்.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு வரைக்கு அழைத்துச் சென்றார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கேப்டனாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2020ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றுள்ளார். 2024-ம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன் சாம்பியன் பட்டமும் பெற வைத்தார். தற்போது பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் கேப்டனுக்கான போட்டியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் கேப்டன்சி குறித்து Cricbuzz-யிடம் பேட்டியளித்த ஸ்ரேயாஸ், "கேப்டன்சி நிறைய முதிர்ச்சியையும் பொறுப்பையும் கொண்டு வருகிறது. அணிக்கு சிறந்த முறையில் பங்களிக்க வேண்டும் என்று உங்களை எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் ஒரு அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போதெல்லாம் அவர்கள் எப்போதும் கேப்டனை நோக்கி தான் வருவார்கள். நான் 22 வயதிலிருந்தே கேப்டனாக இருந்து வருவதால், எனக்கு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன். நான் அப்படியான தருணங்களை ரசித்திருக்கிறேன். கேப்டனாக வழிநடத்துவதை விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். 

    • பண்டிற்கு லக்னோ அணி கொடுத்த ரூ.27 கோடி என்பது மிகப்பெரிய தொகை
    • லக்னோ அணி இன்னும் சில திறமையான வீரர்களை வாங்கலாம்.

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிக (ரூ.27 கோடி ) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப்பண்ட் தனது மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

    இந்நிலையில், ரிஷப் பண்டிற்கு லக்னோ அணி கொடுத்த ரூ.27 கோடி என்பது மிகப்பெரிய தொகை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, "தன்னை பொருத்த வரை ரிஷப்பை அணியில் இருந்து விடுவித்து விட்டு மினி ஏலத்தில் ரூ.14 அல்லது ரூ.15 கோடிக்கு ஏலம் எடுக்கலாம். மீதமுள்ள தொகையை வைத்து இன்னும் சில திறமையான வீரர்களை வாங்கலாம். அதன்மூலம் நீங்கள் அடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணியாக மாறலாம்" என்று தெரிவித்தார்.

    • 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் அருண் கார்த்திக் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.

    9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (ஜூன் 9, 2025) நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

    முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கே. ஆஷிக் அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பாபா அபராஜித் 41 ரன்களும், ஸ்வப்னில் சிங் 14 பந்துகளில் அதிரடியாக 45 ரன்களும் எடுத்தனர். 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி, சேப்பாக் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    கேப்டன் அருண் கார்த்திக் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். முகமது அட்னான் கான் 27 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். இருப்பினும், இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது நெல்லை ராயல் கிங்ஸ். இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் புள்ளிப் பட்டியலில் முன்னேறி உள்ளது.  

    • சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
    • சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோர் 2009 ஆம் ஆண்டு இந்த மரியாதையைப் பெற்ற முதல் இந்தியர்கள் ஆவர்.

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த கௌரவத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

    இந்த வருட ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் தோனி, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் ஆம்லா மற்றும் கிரேம் ஸ்மித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்று (ஜூன் 9) ICC அறிவித்துள்ளது.

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

    சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோர் 2009 ஆம் ஆண்டு இந்த மரியாதையைப் பெற்ற முதல் இந்தியர்கள் ஆவர். இந்த அறிவிப்பு தோனியின் 44வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வந்துள்ளது மேலும் சிறப்பு பெறுகிறது.

    இதன்படி தற்போது, ICC ஹால் ஆஃப் ஃபேமில், எம்.எஸ். தோனி, நீது டேவிட், வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி, வினூ மங்கட், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, கபில் தேவ், பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர் ஆகிய இந்திய வீரர்கள் இதுவரை இடம்பெற்றுள்ளனர்.

    இந்த கௌரவம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தோனி, "உலகம் முழுவதிலுமிருந்து வரும் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் பெயர் இடம்பெற்றிருப்பது ஒரு மரியாதை.

    இதுபோன்ற எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களுடன் உங்கள் பெயரையும் நினைவுகூருவது ஒரு அற்புதமான உணர்வு. இது நான் என்றென்றும் போற்றும் ஒரு கௌரவம்" என்று கூறியுள்ளார். 

    • பாபா அபராஜித் 29 பந்தில் 41 ரன்களும், கே. ஆஷிக் 38 பந்தில் 54 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
    • ஸ்வப்னில் சிங் 14 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 45 ரன்கள் விளாசினார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 6ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கே. ஆஷிக், மோஹித் ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹரிகரன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆஷிக் உடன் கேப்டன் பாபா அபராஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    பாபா அபராஜித் 29 பந்தில் 41 ரன்களும், கே. ஆஷிக் 38 பந்தில் 54 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த என். ஜெகதீசன் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    17 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்திருந்தது. 18ஆவது ஓவரை உதய் குமார் வீசினார். இந்த ஓவரில் ஸ்வப்னில் சிங் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு 25 ரன்கள் கிடைத்தது. இதனால் 181 ரன்கள் குவித்தது.

    19ஆவது ஓவரை சோனு யாதவ் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் அடித்தது. இதனால் 196 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரை வெள்ளியப்பன் யூதீஸ்வரன் வீசினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ் விளாசிய ஸ்வப்னில் சிங் 4ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 45 ரன்கள் விளாசினார். ஆவது பந்தில் அபிஷேன் தன்வர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரன் அவுட் உடன் ஒரு ரன் கிடைத்தது. மொத்தமாக 16 ரன்கள் கிடைத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 212 ரன்கள் குவித்துள்ளது. விஜய் சங்கர் 24 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:-

    என். ஜெகதீசன், பாபா அபராஜித், அபிஷேக் தன்வர், எஸ் தினேஷ் ராஜ், சுனில் கிருஷண்னா, மோஹித் ஹரிகரன், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், பிரேம் குமார், எம். சிலம்பரசன், கே. ஆஷிக்.

    நெல்லை ராயல் கிங்ஸ் அணி:-

    அருண் கார்த்திக், அஜிதேஷ் குருசாமி, என்.எஸ். ஹரிஷ், ரிதிக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி.எஸ். நிர்மல் குமார், முகமது அட்னாம் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யூதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், எம். உதய் குமார்.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
    • நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 6ஆவது போட்டி கோவையில் நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தெர்வு செய்துள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:-

    என். ஜெகதீசன், பாபா அபராஜித், அபிஷேக் தன்வர், எஸ் தினேஷ் ராஜ், சுனில் கிருஷண்னா, மோஹித் ஹரிகரன், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், பிரேம் குமார், எம். சிலம்பரசன், கே. ஆஷிக்.

    நெல்லை ராயல் கிங்ஸ் அணி:-

    அருண் கார்த்திக், அஜிதேஷ் குருசாமி, என்.எஸ். ஹரிஷ், ரிதிக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி.எஸ். நிர்மல் குமார், முகமது அட்னாம் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யூதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், எம். உதய் குமார்

    ×