என் மலர்
நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா பிரீமியர் லீக்"
- 6-வது லீக் போட்டியில் புனேரி பப்பா- ராய்காட் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின.
- இந்த போட்டியில் புனேரி பப்பா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகாராஷ்டிரா பிரீமியர் லீக் கடந்த ஜூன் 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த தொடரின் 6-வது லீக் போட்டியில் புனேரி பப்பா- ராய்காட் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த புனேரி பப்பா 20 ஓவரில் 202 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ராய்காட் ராயல்ஸ் அணி 13.1 ஓவரில் 103 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் ஒரு வித்தியாசமான ரன் அவுட் செய்யப்பட்டது. அதன்படி முதல் ஓவரில் சித்தேஷ் வீர், லெக் திசையில் அடிப்பார். அது சரியாக பேட்டில் படாமல் கீப்பர் அருகில் செல்லும். இதனை கவனிக்காமல் பேட்ஸ்மேன் ஓட தொடங்குவார். உடனே எதிர் முனையில் இருந்த வீரர் ஹர்ஷ் மொகவீரா வேண்டாம் என குரல் கொடுப்பார்.
உடனே சித்தேஷ், கிரீஸ்-க்கு உள்ளே வருவார். அப்போது கீப்பர் எறிந்த பந்து ஸ்டெம்பில் பட்டு பவுலர் திசையில் இருந்த ஸ்டெம்பிலும் பட்டுவிடும். இதில் யார் அவுட் என்பது குறித்து 3-வது நடுவரிடம் பரிசீலனைக்கு செல்லும். அப்போது எதிர் திசையில் இருந்த ஹர்ஷ் அவுட் என வந்தது.
கீப்பர் திசையில் இருந்த ஸ்டெம்பில் பட்டு பவுலர் திசையில் இருந்த ஸ்டெம்பிலும் பட்டு வீரர் ரன் அவுட் ஆன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






