என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இதுவரை கண்டதிலேயே தலைசிறந்த கேப்டன் - தோனிக்கு புகழாரம் சூட்டிய தினேஷ் கார்த்திக்
- தோனி அனைத்து ஐசிசி கோப்பைகளையும், 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளார்.
- தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த கௌரவத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ஐசிசி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஏபி டி வில்லியர்ஸ், ரிக்கி பாண்டிங், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல வீரர்கள் தொனியை புகழ்ந்து பேசியுள்ளனர்.
அதில் பேசிய தினேஷ் கார்த்திக், "ஒட்டுமொத்த உலகம் இதுவரை கண்டதிலேயே தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராஃபி, டெஸ்டுக்கான GOLDEN MAZE என அனைத்து ஐசிசி கோப்பைகளையும், 5 ஐபிஎல் கோப்பைகளையும் அவர் வென்றுள்ளார். அனைத்தையும் அணியின் தலைவனாக முன்னின்று வென்றுள்ளார்" என்று தெரிவித்தார்.






