என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 2-வது டி20யில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது
    • டி20 தொடரில் ஜாஸ் பட்லர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து / England whitewashed West Indies in T20

    ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் 2 டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பெண் டக்கெட் 84 ரன்கள் விளாசினார்.

    இதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, டி20 தொடரிலும் அனைத்து போட்டிகளில் வென்று ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி அதிரடி காட்டியுள்ளது.

    ஒருநாள் தொடரில் ஜோ ரூட் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் டி20 தொடரில் ஜாஸ் பட்லர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • சச்சின், யுவராஜ், புஜாராவுக்கு பிறகு இந்த கிளப்பிற்கு ருதுராஜ் விளையாடவுள்ளார்.
    • ஜூலை மாதம் ருதுராஜ் கெய்க்வாட் யார்க்ஷயர் அணியுடன் இணைவார்

    இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட அந்நாட்டின் பிரபல யார்க்ஷயர் (Yorkshire) கிளப்பில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்துள்ளார்.

    இதன் மூலம் சச்சின், யுவராஜ், புஜாராவுக்கு பிறகு இந்த கிளப்பிற்கு விளையாடும் 4வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    ஜூலை மாதம் ருதுராஜ் கெய்க்வாட் யார்க்ஷயர் அணியுடன் இணைவார் என்றும் இந்த சீசன் முடியும் வரை அவர் அணியில் இருப்பார் என்று யார்க்ஷயர் கிளப் தெரிவித்துள்ளது.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.
    • லண்டன் லார்ட்சில் இன்று (இந்திய நேரப்படி) மாலை 3 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது.

    ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக் கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.

    தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று (இந்திய நேரப்படி) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

    கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். ஐ.சி.சி. கோப்பையை வெல்ல நீண்ட காலமாக போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும், கோப்பையை தக்க வைக்க ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

    இந்நிலையில், நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆடும் லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா அணி வீரர்களின் விவரம் வருமாறு:

    உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் , பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (WK), பேட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்

    • திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • ராஜ்குமார் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார்.

    டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன. கோவையில் இன்று 7வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தடைபட்டது.

    சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் 10 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராஜேந்திரன் விவேக் 2 ரன்னிலும், கவின் 3 ரன்னிலும் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஹரி நிஷாந்த் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அடுத்து இறங்கிய சன்னி சந்து அதிரடியில் மிரட்டினார். ஹரி நிஷாந்த் 58 பந்தில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சன்னி சந்து 27 பந்தில் 45 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    4வது விக்கெட்டுக்கு ஹரி நிஷாந்த், சன்னி சாந்து ஜோடி 93 ரன்கள் சேர்த்தது. இறுதியில், சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது. திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான சுஜய் சிவசங்கரன் 4 ரன்கள் மற்றும் கேப்டன் ஜெயராமன் சுரேஷ் குமார் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அவர்களைத் தொடர்ந்து வசீம் அகமது 16 ரன்களிலும், முகிலேஷ் 2 ரன்களிலும், சஞ்சய் யாதவ் 11 ரன்களிலும், ஜாபர் ஜமால் 2 ரன்களிலும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். 

    சிரமமான சூழ்நிலையில், ஜெகதீசன் கவுசிக் மற்றும் ராஜ்குமார் ஜோடி சேர்ந்தனர். ராஜ்குமார் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார். ஆனால் அவர் ஆட்டமிழந்த பிறகு, சரவண குமார் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜெகதீசன் கவுசிக் 39 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், திருச்சி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன் மூலம் சேலம் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. சேலம் அணியின் மொஹமது அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    • டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி, முதலில் ஆடிய சேலம் அணி 179 ரன்களை குவித்தது.

    கோவை:

    டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன. கோவையில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தடைபட்டது.

    அதன்படி, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் 10 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராஜேந்திரன் விவேக் 2 ரன்னிலும், கவின் 3 ரன்னிலும் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஹரி நிஷாந்த் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அடுத்து இறங்கிய சன்னி சந்து அதிரடியில் மிரட்டினார். ஹரி நிஷாந்த் 58 பந்தில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சன்னி சந்து 27 பந்தில் 45 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    4வது விக்கெட்டுக்கு ஹரி நிஷாந்த், சன்னி சாந்து ஜோடி 93 ரன்கள் சேர்த்தது.

    இறுதியில், சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது.

    திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • கடந்த இரு சீசன்களிலும் இந்திய அணி இரண்டாவது இடம் பெற்றது.
    • கேப்டனாக டெம்பா பவுமா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடையவில்லை.

    லார்ட்ஸ்:

    ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக் கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.

    தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (இந்திய நேரப்படி) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

    கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். ஐ.சி.சி. கோப்பையை வெல்ல நீண்ட காலமாக போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும், கோப்பையை தக்க வைக்க ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி டெம்பா பவுமா கேப்டன்சிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் புத்தெழுச்சி பெற்றுள்ளது. கேப்டனாக டெம்பா பவுமா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடையவில்லை. அந்த பெருமையுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

    இந்நிலையில், நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆடும் லெவன் அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் விவரம் வருமாறு:

    ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின் (விக்கெட்கீப்பர்), மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி

    • சேலம் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளது.
    • திருச்சி அணி இதுவரை வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.

    கோவை:

    டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளது. திருச்சி அணி வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.

    இந்நிலையில், டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்குகிறது.

    • பேட்டர்கள் பந்தை எதிர்கொள்வதை மேலும் மேலும் கடினமாக்குவோம்.
    • பேட்டர்களுக்கு பந்து வீசுவது வேடிக்கையாக இருந்தது.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். அவர் மட்டுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு நிச்சயம் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் தனது பயிற்சி குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங்,

    பயிற்சி அமர்வைப் பொறுத்தவரை, எனது ஒரே வேலை சரியான இடத்தில் பந்துவீசுவது மட்டும் தான். ஏனெனில் எனது உடல் எப்படி ஒத்துழைக்கிறது, சிவப்பு பந்து கையிலிருந்து எப்படி வெளியே வருகிறது என்பதை நான் சரி பார்க்கிறேன்.

    ஏனெனில் அனைத்து வீரர்களும் நீண்ட காலமாக வெள்ளை பந்தை வைத்து விளையாடி வருகின்றனர். அதனால் நான் இந்த பயிற்சியை மிகவும் ரசித்தேன்.

    மேலும் பேட்டர்கள் பந்தை எதிர்கொள்வதை மேலும் மேலும் கடினமாக்குவோம். பேட்டர்களுக்கு பந்து வீசுவது வேடிக்கையாக இருந்தது. அவர்கள் மிகவும் கச்சிதமாகத் தெரிந்தனர். மேலும் அவர்களிடம் போட்டி மனப்பான்மையும் இருந்தது. நாங்கள் எங்களின் ரிதமில் மட்டுமே வேலை செய்தாலும், அவர்கள் முழுமையான பயிற்சியை மேற்கொண்டனர். அதனால் அது இன்னும் வேடிக்கையாக இருந்தது. அதனால் நாங்கள் சரியான திட்டத்துடன் அவர்களை வெளியேற்ற முயற்சிக்க வேண்டியிருந்தது.

    சாய் முதல் முறையாக அணியில் இணைந்துள்ளார். அவரும் மிகவும் கச்சிதமாகத் தெரிந்தார். கேப்டனும் நல்ல ஃபார்மில் தொடர்பில் இருந்தார். அதனால் நான் தொடர்ந்து முன்னேறவும், அவர்களை அடிக்கடி வெளியேற்றவும் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவருகிறேன்.

    என்று தெரிவித்துள்ளார். 

    • இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
    • சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவம் உள்ள வீரர்கள் ஓய்வு அறிவித்த நிலையில் இந்த தொடரில் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இளம் வீரர்கள் கொண்ட இந்த அணியில் சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் டெஸ்ட்டில் அறிமுகமாகின்றனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த விராட் கோலியாக சாய் சுதர்ஷன் இருப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தற்போது இந்திய அணியில் சில நல்ல இளம் வீரர்கள் உள்ளனர். அதில் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் சாய் சுதர்சன். அவர் மிகவும் ஆக்ரோஷமாகவும் பயமற்றவராகவும் தெரிகிறார். இங்கிலாந்து சூழ்நிலைகளிலும் சர்ரே அணிக்காகவும் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

    இதனால் நான்காம் இடத்தில் விராட் கோலியின் ரோலை ஏற்று இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக அவர் வருவார் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் ஒரு வீரரை நான் காண விரும்புகிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிய விதம், இளம் இந்திய டெஸ்ட் வீரர்களும் அதே வழியில் விளையாடுவதை நான் காண விரும்புகிறேன் என்று கூறினார்.

    • 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.

    2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.

    தற்போது 38 வயதான ரோகித் சர்மா 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார். இருப்பினும் அவருக்கு அந்த ஒருநாள் உலகக்கோப்பை வரும்போது வயது 40-ஐ எட்டிவிடும். இதனால் அவர் அதுவரை விளையாடுவாரா? என்ற கேள்வி நிலவுகிறது. இருப்பினும் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று ரோகித் சர்மா கூறியிருந்தார்.

    இந்நிலையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அவர் வீரராக தொடருவாரா? இல்லையா? என்பதை குறித்து எதுவும் முடிவெடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இது இந்திய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ரோகித் தலைமையில் ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் விளையாடிய இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. அதுவும் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில்தான் அந்த தோல்வி வந்தது. மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
    • ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த வெற்றி, ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பையும், சந்தை மதிப்பையும் உயர்த்தியுள்ளது.

    முதல் வெற்றி, பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆர்சிபி அணியின் உரிமையாளரான பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டயாஜியோ பிஎல்சி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் உரிமையை விற்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டயாஜியோ நிர்வாகம் ஆர்சிபி அணியின் முழு அல்லது பகுதி உரிமையை விற்க திட்டமிடுவதாகவும், இதற்கு ஆர்சிபி அணியை 2 பில்லியன் டாலர் வரையில் மதிப்பீட்டை எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, மேலும் அணியை விற்காமல் வைத்திருக்கவும் வாய்ப்புள்ளது.

    18 வருடத்திற்கு பின்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின்பு இப்படியொரு முடிவு எடுத்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் LBW முறையில் அவுட் ஆனார்.
    • இந்த அவுட் குறித்து பெண் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 5-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் அணி 11.5 ஓவரில் 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பான ஆடிய அஸ்வின், சாய் கிஷோர் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.

    ரீபிளேவில் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாக தெரிந்தது. ஆனால் ஏற்கனேவே 2 ரிவ்யூக்களையும் இழந்ததால் அவரால் அந்த விக்கெட்டுக்கு ரிவ்யூ எடுக்க முடியவில்லை.

    இதனால் பெண் நடுவரிடம் முறையிட்ட அஸ்வின், பின்னர் கடுப்பாகி தனது பேட்டை கொண்டு தனது காலில் அடித்தார். பின்னர் தனது கிளவுஸை கழட்டி வெளியே வீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில் பெண் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ஊதியத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ×