என் மலர்
நீங்கள் தேடியது "ஹாரி ப்ரூக்"
- கேன் வில்லியம்சன் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- தொடக்க வீரர்களான டாம் லாதம் (17), டேவன் கான்வே (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் ஹாரி ப்ரூக் (123) சதமும், ஒல்லி போப் (66) அரைசதமும் அடிக்க இங்கிலாந்து 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். தொடங்க வீரர்களான டாம் லாதம் (17), டேவன் கான்வே (11) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கேன் வில்லியம்சன் தாக்குப்பிடித்து 37 ரன்கள் அடித்தார். ரச்சின் ரவீந்திரா 3 ரன்னிலும், டேரில் மிட்செல் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. ஓ'ரூக்கே ரன்ஏதும் எடுக்காமலும், பிளெண்டல் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறியது.
- ஹாரி ப்ரூக் சதம், ஒல்லி போப் அரைசதம் அடித்து அணியை மீட்டனர்.
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்தின் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
ஒரு கட்டத்தில் 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு ஹாரி ப்ரூக் உடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
ஒல்லி போக் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹாரி ப்ரூக் சிறபப்ான விளையாடி சதம் விளாசினார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது. ஹாரி ப்ரூக் 123 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார்.
இருவரும் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியே இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 54.4 ஓவரில் 280 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 3 விக்கெட், வில்லியம் ஓ'ரூக்கே 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது.
- முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்தது.
- பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
முல்தான்:
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் 7-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆகா ஜமான், ஆமீர் ஜமால் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இதனால் பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட்டில் தோல்வியடைந்ததன் மூலம் 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி மோசனமான சாதனையை படைத்துள்ளது. ஒரு அணி முதல் இன்னிங்சில் 500 ரன்கள் மேல் குவித்து தோல்வியடைந்த முதல் அணி பாகிஸ்தான் ஆகும்.
- பாகிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.
- முச்சதம் விளாசிய ஹாரி ப்ரூக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முல்தான்:
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் 7-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன், ஷபீக் 102 ரன்கள் எடுத்தனர்.
அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நான்காம் நாளில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணி 82 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து 7வது விக்கெட்டுக்கு ஆகா ஜமான், ஆமீர் ஜமால் ஜோடி தாக்குப் பிடித்து ஆடியது. இதனால் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. ஆகா ஜமான் 41 ரன்னும், ஆமீர் ஜமால் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் இன்று கடைசி ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். 63 ரன்கள் எடுத்த நிலையில் சல்மான் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் அப்ரிடி, நசீம் ஷா, என அடுத்தடுத்டு வெளியேறினர். அப்ரார் அகமது காயம் காரணமாக வெளியேறினார்.
இதனால் பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜாமன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 ரன்களுடன் இருந்தார். இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
- 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது.
- இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களையும் சேர்த்தனர்.
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்சில் 556 ரன்களைக் குவித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்களை குவித்து இன்னிங்சை டிக்ளர் செய்ததுடன், முதல் இன்னிங்சில் 267 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து 2-வது இன்னிங்சைத் தொடங்கியுள்ள பாகிஸ்தான் அணியானது அடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 450 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களையும் சேர்த்தனர்.
இதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்சில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாகவும் அவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன் 1958-ம் ஆண்டு கிங்ஸ்டன் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கேரி சோபர்ஸ் - கோன்ரட் ஹண்டே 446 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.
- ஹாரி ப்ரூக் 28 பவுண்டரி 3 சிக்சருடன் 317 (322) ரன்கள் குவித்தார்.
- இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் பாகிஸ்தானை வீழ்த்தி விடும்.
பாகிஸ்தான்- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 7-ம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 151, அப்துல்லா ஷபிக் 102, ஆகா சல்மான் 104* ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் லீச் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 823-7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 317, ஜோ ரூட் 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக இங்கிலாந்து உலக சாதனை படைத்தது.
பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நாசிம் சா 2, சாய்ம் ஆயுப் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் பாகிஸ்தான் 4-ம் நாள் முடிவில் 152-6 என தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த அந்த அணிக்கு களத்தில் ஆகா சல்மான் 41*, அமீர் ஜமால் 27* ரன்களுடன் போராடி வருகின்றனர்.
முன்னதாக இந்தப் போட்டியில் ஹாரி ப்ரூக் 28 பவுண்டரி 3 சிக்சருடன் 317 (322) ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற இந்திய ஜாம்பவான் வீரேந்திர சேவாக் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 2004-ம் ஆண்டு இதே முல்தான் மைதானத்தில் வீரேந்திர சேவாக் பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக 310 பந்துகளில் 300 ரன்கள் அடித்த ஹரி ப்ரூக் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது அதிவேகமான முச்சதத்தை அடித்த வீரர் என்ற மேத்தியூ ஹைடன் (362 பந்துகள்) சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். முதலிடத்தில் இப்போதும் இந்தியாவின் சேவாக் உள்ளார். (278 பந்துகள், தென்னாபிரிக்காவுக்கு எதிராக சென்னை 2008).
- பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்த டெஸ்ட் போட்டியில் 310 பந்துகளில் முச்சதத்தை கடந்து ஹாரி புரூக் சாதனை படைத்துள்ளார்
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் 310 பந்துகளில் முச்சதத்தை கடந்து ஹாரி புரூக் சாதனை படைத்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அடிக்கப்பட்ட 2 ஆவது டெஸ்ட் முச்சதமாகும். 278 பந்துகளில் வீரேந்திர சேவாக் அடித்த முச்சதம் தான் அதிவேகமாக அடிக்கப்பட்ட டெஸ்ட் முச்சதமாகும்.
இப்போட்டியில் 823 ரன்களை குவித்துள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3 ஆவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 903 ரன்களும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 849 ரன்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து வீரர்கள் டக்கெட், ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன் ஆகியோர் அரைசதம்.
- ஆஸ்திரேலியா 126 ரன்னில் சுருண்டு பரிதாபம்.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளில் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் 4-வது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
மழைக்காரணமாக போட்டி 39 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, கேப்டன் ஹாரி ப்ரூக் (58 பந்தில் 87 ரன்), டக்கெட் (62 பந்தில் 63 ரன்), லிவிங்ஸ்டன் (27 பந்தில் 62 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 312 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியில் ஆடம் ஜம்பா 8 ஓவரில் 66 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 313 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க ஜோடி 8.4 ஓவருக்கு 68 ரன்கள் விளாசியது. மிட்செல் மார்ஷ் 34 பந்தில் 28 ரன்களும், டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஆஸ்திரேலியா விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் மளமளவென சரிந்தது. 24.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 126 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 186 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா கடைசி 58 ரன்களுக்குள் 10 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி சார்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், ஆர்ச்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 2-2 என சமநிலை செய்துள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை பிரிஸ்டோலில் நடக்கிறது.
- ஹாரி ப்ரூக் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஜேமி ஸ்மித் 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி நேற்றுதினம் மான்செஸ்டரில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்களும், மிலன் ரத்னாயகே 72 ரன்களும் சேர்க்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் ஏதும் இழக்காமல் 22 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர் பென் டக்கெட் 18 ரன்னிலும், லாரன்ஸ் 30 ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் ஒல்லி போப் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

நட்சத்திர வீரர் ஜோ ரூட் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹாரி ப்ரூக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அதபின் வந்த விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்தும அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.
நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 61 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 72 ரன்னுடனும், அட்கின்சன் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது.
- ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்),
- அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), டேவிட் வில்லே (எல்.எஸ்.ஜி.) ஆகியோர் விலகியுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து இங்கிலாந்து, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏலத்தில் எடுக்கப்படும் வீரரகள் காயம் காரணமாக சில நேரங்களில் விளையாட முடியாமல் போகலாம். சில வீரர்கள் தனிப்பட்ட காரணத்திற்கான ஐபிஎல் தொடரை புறக்கணிக்கலாம். சிலர் சர்வதேச போட்டியில் விளையாட இருப்பதால் வொர்க்லோடு காரணமாக ஐபிஎல் தொடரை தவிர்ப்பது உண்டு.
ஆனால் இந்த சீசனில் இங்கிலாந்தைச் சேர்ந்த அதிகமான வீரர்கள் விலகியுள்ளனர். ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்), கஸ் அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து ஏற்கனவே விலகியிருந்தனர்.
ஜேசன் ராய், ஹாரி ப்ரூக் ஆகியோர் தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவாக அறிவித்திருந்தனர். மார்க் வுட் மற்றும் அட்கின்சன் ஆகியோரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளையாட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது லக்னோ அணியில் இருந்து டேவிட் வில்லே தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.
பட்லர், பிலிப் சால்ட், சாம் கர்ரன், பேர்ஸ்டோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- டெல்லி அணியால் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணி வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
- குடும்பத்தை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை.
டெல்லி:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த சீசனில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக கம்பேக் கொடுக்கவுள்ளார். நேற்று முதல் டெல்லி பயிற்சி முகாமில் இணைந்த ரிஷப் பண்ட், தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் டெல்லி அணியால் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக், வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். டெல்லி அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்ட போது, இந்த சீசனில் விளையாட ஆர்வமாக இருந்தேன். ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து பின் வாங்கியதற்கு சொந்த காரணங்களை கூற வேண்டும் என்று நினைத்ததில்லை. கடந்த மாதம் எனது பாட்டி மறைந்துவிட்டார். சிறு வயதில் இருந்து எனது பாட்டியின் வீட்டில் வளர்ந்தவன், அவர் எப்போதும் எனக்கு ஒரு தூண் போல் நம்பிக்கை அளித்தவர்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அபுதாபியில் இருந்து புறப்படும் போது தான் பாட்டியின் உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனால் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தேன். தற்போது எங்களிடம் இருந்து பாட்டி மறைந்துவிட்டார். இதனால் எனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழலில் உள்ளேன்.
குடும்பத்தை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதே சரியான முடிவாக கருதுகிறேன். என்னிடம் இன்னும் பல ஆண்டு கால கிரிக்கெட் மீதமிருப்பதால், வரும் காலங்களில் நிச்சயம் விளையாடுவேன். இந்த கடினமான சூழலில் எனக்கு ஆதரவாக இருந்த இங்கிலாந்து நிர்வாகம் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் இரண்டுக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்.
என்று ஹாரி ப்ரூக் கூறினார்.
- ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
- 2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் அந்த தொடரில் அவர் வெறும் 190 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனை அடுத்து ஹாரி ப்ரூக்கை அந்த அணி கழட்டி விட்டது. பின்னர் 2024 தொடரில் ரூ.4 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.