என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உலகத்தில் உள்ள எல்லோருக்கும் தெரியும்: சேஸிங் குறித்து ஹாரி ப்ரூக் சொல்வது இதுதான்..!
- இங்கிலாந்து 244 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
- 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரூக்- ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரூக் 158 ரன்களும், ஜெமி ஸ்மித் 184 ரன்களும் விளாசினர். இதனால் இங்கிலாந்து 407 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்கள் முன்னிலைப் பெற்றது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இன்று சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்துக்கு 400 ரன்களுக்கு மேலாக இமாயல இலக்கை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இதனால் இங்கிலாந்து அணி தற்போதைய நிலையில் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது.
இந்த நிலையில் ஹாரி ப்ரூக் சேஸிங் குறித்து கூறியதாவது:-
தற்போது வரை இந்த டெஸ்டில் எங்களால் வெற்றி பெற முடியும் என நினைக்கிறேன். 4ஆவது நாள் காலையில் (இன்று) இந்தியாவின் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், இந்தியா எவ்வளவு ஸ்கோர் இலக்காக நிர்ணயித்தாலும், நாங்கள் களத்தில் சென்ற சேஸிங் செய்ய முயற்சி செய்வோம் என்பது உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறு ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.