என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ENG Vs IND டெஸ்ட்: 99 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஹாரி ப்ரூக்
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது
- இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் சதம் அடித்தார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி தற்போது வரை 7 விக்கெட் இழப்பிற்கு 420 ரன்கள் அடித்து ஆடி வருகிறது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹாரி ப்ரூக் 99 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.
பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஹாரி ப்ரூக் ஆட்டமிழந்தார். ஏற்கனவே 0 மற்றும் 46 ரன்னில் இருக்கும் போது ப்ரூக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். 2 முறை ப்ரூக்கிற்கு இருந்த அதிர்ஷ்டம் 99 ரன்னில் இல்லாமல் போனதால் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.






