என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஜோ ரூட், ஸ்டோக்ஸ் எளிதில் அவுட்: மிரட்டிய ப்ரூக்- ஸ்மித் ஜோடி- இங்கிலாந்து 249/5
    X

    ஜோ ரூட், ஸ்டோக்ஸ் எளிதில் அவுட்: மிரட்டிய ப்ரூக்- ஸ்மித் ஜோடி- இங்கிலாந்து 249/5

    • ஜோ ரூட் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் முதல் பந்திலேயே வெளியேறினார்.
    • ஜேமி ஸ்மித் 80 பந்தில் சதம் விளாசினார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.

    நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும், ப்ரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் சிராஜ் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6ஆவது விக்கெட்டுக்கு ப்ரூக் உடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருநாள் போட்டி போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ப்ரூபக் 73 பந்திலும், ஸ்மித் 43 பந்திலும் அரைசதம் அடித்தனர்.

    தொடர்நது விளையாடிய ஸ்மித் 80 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் விளாசினார். மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இங்கிலாந்து 3ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்க 249 ரன்கள் அடித்துள்ளது. ப்ரூக் 91 ரன்களுடனும், ஸ்மித் 102 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 25.3 ஓவரில் 165 ரன்கள் குவித்துள்ளது.

    Next Story
    ×