என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹால் ஆப் பேம்"

    • ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் எம்எஸ் தோனி இணைந்துள்ளார்.
    • எம்.எஸ்.தோனி 11-வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது.

    அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சேர்கப்பட்டுள்ளார்.

    இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே , ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்த கவுரவத்தை பெற்றுள்ளநிலையில், எம்.எஸ்.தோனி 11-வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் எம் எஸ் தோனிக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    Hall of Fame-இடம்பெற்ற தோனிக்கு வாழ்த்துகள். அதிகமுறை ஒருநாள் அணியை வழிநடத்தியது தொடங்கி, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், அதிக ஸ்டப்பிங் செய்த கீப்பர், சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்த கேப்டன் என ஒரு சரித்திரத்தை உருவாக்கியுள்ளார்.

    அமைதியால் தலைமைப் பண்புக்கே புது வடிவம் கொடுத்தவர். விக்கெட் கீப்பிங்கை கலையாக மாற்றியவர். எப்போதும் Thala For A Reason என்றே போற்றப்படுவீர்கள்.

    • ‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி சேர்க்கப்படுவதாக ஐசிசி அறிவித்தது.
    • இந்த கவுரவம் வாழ்வில் எப்போதும் பசுமையான நினைவாக நிலைத்திருக்கும் என தோனி கூறினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுத்தந்த ஒரே கேப்டன் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்சுக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 538 சர்வதேச போட்டிகளில் ஆடி 17,266 ரன்கள் எடுத்து இருப்பதுடன், விக்கெட் கீப்பிங்கில் 829 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்.

    இந்த நிலையில் 'ஹால் ஆப் பேம்' என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி சேர்க்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இது கிரிக்கெட்டில் தனது பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இந்த கவுரவம் வாழ்வில் எப்போதும் பசுமையான நினைவாக நிலைத்திருக்கும் என்றும் 43 வயதான தோனி கூறியுள்ளார்.

    இந்திய வீரர்களில் ஏற்கனவே பிஷன்சிங் பெடி, கபில்தேவ், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், கும்பிளே, வினோ மன்கட், ஷேவாக், சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில் ஐசிசின் Hall of Fame பட்டியலில் இணைக்கப்பட்ட தோனிக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருந்து 2011 உலக கோப்பையை சிக்ஸர் மூலம் வென்றது வரை அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் பதிந்துள்ளன. அமைதியான முறையில் அணியை வழிநடத்தி இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை வழங்கிய எம்.எஸ்.தோனிக்கு பொருத்தமான மரியாதை என எடப்பாடி கூறினார். 

    • கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • இந்த பட்டியலில் இந்திய வீராங்கனை நீது டேவிட் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இங்கிலாந்து அணியின் அலெஸ்டைர் குக் மற்றும் இந்திய வீராங்கனை நீது டேவிட், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய 3 கிரிக்கெட் நட்சத்திரங்களை 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தியது.

    இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஏற்கனவே இந்த கவுரவத்தை பெற்றுள்ளனர்.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




    • ஹால் ஆப் பேம் பட்டியலில் டிவில்லியர்சை இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தி உள்ளது.
    • இதற்காக டிவில்லியர்ஸ்-க்கு இந்திய வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐ.சி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதில் இங்கிலாந்து அணியின் அலெஸ்டைர் குக் மற்றும் இந்திய வீராங்கனை நீது டேவிட், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய 3 கிரிக்கெட் நட்சத்திரங்களை 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த 3 பேரில் ஒருவரான ஏபி டிவில்லியர்ஸுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உங்கள் இடத்திற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர். எல்லாவற்றிற்கும் மேலாக, ஹால் ஆப் பேம் என்பது விளையாட்டில் உங்கள் தாக்கத்தின் பிரதிநிதித்துவமாகும். மேலும் உங்களுடையது உண்மையிலேயே தனித்துவமானது.

    மக்கள் எப்போதும் உங்கள் திறனைப் பற்றி பேசுகிறார்கள், அது சரி. நான் விளையாடியதில் நீங்கள் மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர். முழுவதிலும் நம்பர் ஒன் வீரர். நிறைய வீரர்கள் ஈர்க்கக்கூடிய எண்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் மிகச் சிலரே பார்ப்பவர்களின் ஆன்மாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

    என்னைப் பொறுத்தவரை, ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் வைத்திருக்கக்கூடிய மிக உயர்ந்த மதிப்பு அதுவே. அதுவே உங்களை மிகவும் சிறப்பானதாக்குகிறது. உங்களுடன் மற்றும் எதிராக நான் விளையாடும் நேரத்தில், நீங்கள் எப்போதுமே விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றிய தெளிவான புரிதலை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

    மேலும் நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அதிலிருந்து நீங்கள் ஒருபோதும் விலகியிருக்கவில்லை.

    என்று விராட் கோலி கூறினார்.

    • சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர்.
    • 12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார்.

    முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 64-வது நபராக ஆஸ்திரேலியா வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இதன் விழா சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில், "8,600 டெஸ்ட் ரன்கள், 28 சதங்கள், சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர். முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

    12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 49.10, ஒருநாள் போட்டிகளில் 44.58 சராசரி வைத்துள்ளார். சிட்னியில் அதிகபட்சமாக 329 ரன்கள் அடித்து அசத்தினார். 35 டெஸ்ட் இங்கிலாந்துடனும் 22 டெஸ்ட் இந்தியாவுடனும் விளையாடி 56-க்கும் அதிகமாக சராசரி வைத்திருக்கும் வீரர் மைக்கேல் கிளார்க். 43 வயதாகும் கிளார்க் 2013/14 சீசனில் 5 என ஆஷஸ் தொடரினையும் 2015-ல் ஒருநாள் உலகக் கோப்பையும் வென்றது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது.

    ×