என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீங்கள் எப்போதும் #ThalaForAReason.. தோனிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து
    X

    நீங்கள் எப்போதும் #ThalaForAReason.. தோனிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

    • ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் எம்எஸ் தோனி இணைந்துள்ளார்.
    • எம்.எஸ்.தோனி 11-வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது.

    அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சேர்கப்பட்டுள்ளார்.

    இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே , ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்த கவுரவத்தை பெற்றுள்ளநிலையில், எம்.எஸ்.தோனி 11-வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் எம் எஸ் தோனிக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    Hall of Fame-இடம்பெற்ற தோனிக்கு வாழ்த்துகள். அதிகமுறை ஒருநாள் அணியை வழிநடத்தியது தொடங்கி, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், அதிக ஸ்டப்பிங் செய்த கீப்பர், சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்த கேப்டன் என ஒரு சரித்திரத்தை உருவாக்கியுள்ளார்.

    அமைதியால் தலைமைப் பண்புக்கே புது வடிவம் கொடுத்தவர். விக்கெட் கீப்பிங்கை கலையாக மாற்றியவர். எப்போதும் Thala For A Reason என்றே போற்றப்படுவீர்கள்.

    Next Story
    ×