என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்திய அணியால் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா பயிற்சி மேற்கொள்ள மறுப்பு?
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.
- இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இறுதிப்போட்டி நடைபெறும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஆஸ்திரேலிய அணி பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த மைதானத்தில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய அணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட், 20-ம் தேதி லார்ட்ஸில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






