என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • எனது பயிற்சியாளர்களில் அஸ்வினும் ஒருவர் என ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் கூறினார்.
    • அஸ்வினிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்றார்.

    சிட்னி:

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தனியார் நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அஸ்வின் உலகத்தரம் வாய்ந்தவர். நிச்சயமாக அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு வகையில் அவர் எனது மிகப்பெரிய பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.

    நான் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நாங்கள் இருவரும் அந்த 500 விக்கெட்களை எட்டுவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என புகழாரம் தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 489 விக்கெட்களும், நாதன் லயன் 496 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்கள் சேர்த்தது.
    • தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 15 ஓவரில் 152 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை 13.5 ஓவரில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தொடக்கத்தில் 6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினர். 3-வது வீரராக களம் இறங்கிய திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்கள் விளாசினார். இவர் ஆட்மிழக்கும்போது 5.5 ஓவரில் 55 ரன்கள் சேர்த்திருந்தது.

    வேகப்பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஆனால் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்களான ஷம்சி, மார்க்கிராம் பந்து வீச்சில் சற்று திணறினர். ஷம்சி 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மார்க்கிராம் 3 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினர்.

    மிடில் ஓவர்களில் இருவரும் சிறப்பாக செயல்பட்டதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை என திலக் வர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து திலக் வர்மா கூறியதாவது:-

    நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் சற்று மெதுவாக இருந்தது. புதுப்பந்து சற்று கூடுதலாக சீமிங்-கிற்கு ஒத்துழைத்தது. மார்க்கிராம் மற்றும் ஷம்சி ஆகியோர் பந்து வீசும்போது ஆடுகளம் க்ரிப் (grip) ஆக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஷம்சி, மார்கிராம் ஸ்பெல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இல்லையெனில் நாங்கள் 200 ரன்களை கடந்திருப்போம்.

    நாங்கள் பவர்பிளேயில் சற்று கூடுதலாக ரன்கள் கொடுத்து விட்டோம். அதன்பின் நாங்கள் வலுவான நிலைக்கு திரும்பிய நிலையில், பவுண்டரி லைன் அருகே ஈரப்பதாக இருந்ததால் பந்து நனைந்து, க்ரிப் இல்லாமல் போனது.

    இவ்வாறு திலக் வர்மா தெரிவித்தார்.

    • இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்கள் சேர்த்தது.
    • மழையால் தென்ஆப்பிரிக்காவுக்கு 15 ஓவரில் 152 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.

    ரிங்கு சிங் 39 பந்தில் 68 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 56 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கோயட்சி 3 விக்கெட்டும், மார்கோ ஜான்சென், லிசாட் வில்லியம்ஸ், ஷம்சி, மார்க்கிராம் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. மழையால் அந்த அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா 7 பந்து எஞ்சியிருந்த நிலையில் இந்த இலக்கை எடுத்தது. அந்த அணி 13.5 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹென்ரிக்ஸ் 27 பந்தில் 49 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் மார்க்கிராம் 17 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். முகேஷ் குமார் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    வெற்றி பெறுவதற்கு இந்த ஸ்கோர் போதுமானது. ஆனால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் முதல் 5 முதல் 6 ஓவர்களில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்து விட்டனர். போட்டியின் முடிவையும் எங்களிடம் இருந்து எடுத்து சென்று விட்டனர். இது போன்று கிரிக்கெட்டில் நடப்பது சகஜம்தான்.

    மழை குறுக்கிட்டதால் பந்து முழுவதுமாக ஈரமானது. இதனால் பந்து வீசுவதற்கு மிகவும் சவாலாக இருந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை நாங்கள் ஒரு பாடமாகவே பார்க்கிறோம்.

    மைதானத்தில் என்ன நடந்தாலும் அதை இங்கேயே விட்டு செல்லுங்கள் என்று வீரர்களிடம் தெரிவித்தேன். 3-வது போட்டிக்காக நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது. தொடரை சமன் செய்ய இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது.

    • முன்னணி கால்பந்து வீரர்களும் இடம்பெறவில்லை.
    • விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் இடம்பிடிக்கவில்லை

    உலகின் முன்னணி தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனம் கூகுள். உலகளவில் 2023 ஆண்டு அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் அதிசயிக்கும் வகையில் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி போன்ற முன்னணி கால்பந்து வீரர்கள் இடம்பெறவில்லை.

    இதுதவிர இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. ஆனாலும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலில் ஒரேயொரு இந்திய வீரர் இடம்பிடித்துள்ளார்.

     


    வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் தனது அசாத்திய ஃபார்ம் மூலம் இந்திய அணியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில், உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா இடம்பெற்றுள்ளார்.

    அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் டாப் 10 பட்டியல்:

    1 - டமர் ஹேம்லின்

    2 - கிலியன் எம்பாப்பே

    3 - டிராவிஸ் கெல்ஸ்

    4 - ஜா மொரண்ட்

    5 - ஹேரி கேன்

    6 - நோவக் ஜோகோவிக்

    7 - கார்லோஸ் அல்காரஸ்

    8 - ரச்சின் ரவீந்திரா

    9 - சுப்மன் கில்

    10 - கைரி இர்விங்

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்களை சேர்த்தது.

    கெபேஹா:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 3வது பந்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 2வது ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் டக் அவுட்டானார்.

    3வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில் திலக் வர்மா 29 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிங்கு சிங் யாதவுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர்.


     

    சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்த நிலையில் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜிதேஷ் ஷர்மா ஒரு ரன்னில் வெளியேறினார். ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில், இந்தியா 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. ரிங்கு சிங் 68 ரன் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்ஸி 3 விக்கெட் வீழ்த்தினார். 

    தென் ஆப்பிரிக்கா அணி 15 ஓவர்களில் 150 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை குவித்தது. அந்த வகையில், தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் விதிப்படி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. 

    • முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
    • 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    உடல்நிலை சரியில்லாததால் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் ஆடவில்லை.

    • ஒரு கட்டத்தில் நெதர்லாந்து 3-2 என முன்னிலை வகித்தது.
    • இதில் சுதாரித்துக் கொண்ட இந்தியா சிறப்பாக ஆடி 4-3 என வெற்றி பெற்றது.

    கோலாலம்பூர்:

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. வரும் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு முன்னேறும். இதில் சி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியின் காலிறுதி சுற்றில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. ஒரு கட்டத்தில் 2-3 என நெதர்லாந்து முன்னிலை வகித்தது.

    இதனால் சுதாரித்துக் கொண்ட இந்தியா சிறப்பாக ஆடியதில் 4-3 என அபார வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் பாபி சிங் தாமி ஒரு கோல் அடித்து இந்தியாவை வெற்றிபெற வைத்தார்.

    இதன்மூலம் காலிறுதியில் வென்ற இந்தியா வரும் 14-ம் தேதி அரையிறுதியில் ஜெர்மனியுடன் மோதுகிறது.

    • முதலில் ஆடிய நேபாளம் 52 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    துபாய்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

    ஏ பிரிவில் இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றியும், பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியும் கண்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் இன்று நேபாள அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமால் 22.1 ஓவரில் 52 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன்கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

    இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட்டும், ஆராத்யா சுக்லா 2 விக்கெட்டும், அர்ஷின் குல்கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 7.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஆதர்ஷ் சிங் 13 ரன்னும், அர்ஷின் குல்கர்னி 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7 விக்கெட் வீழ்த்திய ராஜ் லிம்பானி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    • இங்கிலாந்து அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • அதில் இரண்டு பேர் புதுமுக வீரரர்கள் ஆவார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ளது. அந்த அணி தென்ஆப்பிரிக்காவுடன் மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

    இரு அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய அணியின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் ஜனவரி 7-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    அதன்பிறகு ஆப்கானிஸ்தான் அணி ஜனவரியில் இந்தியா வந்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 11 முதல் 17 வரை மொகாலி, இந்தூர், பெங்களூரில் போட்டிகள் நடக்கிறது. ஆப்கானிஸ்தான் தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 முதல் 29 வரை ஐதராபாத்தில் நடக்கிறது. 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்திலும் (பிப். 2-6), 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டிலும் (பிப். 15-19), 4-வது டெஸ்ட் ராஞ்சியிலும் (பிப். 23-27), கடைசி டெஸ்ட் தர்மசாலாவிலும் (மார்ச் 7-11) நடக்கிறது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    4 சுழற்பந்து வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 3 புதுமுகங்கள் அணியில் இடம்பெற்று உள்ளனர். ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, அட்கின்சன் ஆகிய அறிமுக வீரர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். 20 வயதான சோயப் பஷீர் கடந்த ஜூன் மாதம் சோமர்செட் அணிக்காக முதல் தர போட்டியில் அறிமுகமாகி 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    அட்கின்சன், ஹார்ட்லி ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடி உள்ளனர். தற்போது டெஸ்ட் அணியில் நுழைந்துள்ளனர். முன்னணி வேகப்பந்து வீரரான கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு உள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் வருமாறு:-

    பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரேஹான் அகமது, பேர்ஸ்டோவ், ஜோரூட், கிராவ்லி, ஆலிராபின்சன், பென் டக்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன், அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஹார்ட்லி, ஜேக் லீச், பென் போக்ஸ், ஆலிபோப், மார்க்வுட்.

    • 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
    • தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து, கிரிக்கெட்டிற்கு திரும்ப முழு தகுதி பெற்றுள்ளார்

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அவர் கடந்த ஆண்டு ஐ.பி.எல். மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.

    விபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் அவர் முழு உடல் தகுதி பெற்றார். ஆனாலும் அவர் உடனடியாக கிரிக்கெட்டுக்கு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கேப்டனாக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணி கேப்டன் பதவி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

    ஆனால் விக்கெட் கீப்பராக செயல்படுவாரா? என்று உறுதியாக தெரியவில்லை. ரிஷப் பண்ட் விளையாடும் பட்சத்தில் டெல்லி அணி பேட்டிங்கில் பலம்பெறும். அவர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 19-ந்தேதி துபாயில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

    ஏலப் பட்டியலில் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். இங்கிலாந்தில் இருந்து அதிகபட்சமாக 25 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர். அசோசியேட் நாடுகளான நமீபியாவில் இருந்து டேவிட் வைஸ், நெதர்லாந்தில் இருந்து மீக்கெரன் ஆகியோரும் ஏலப்பட்டியலில் உள்ளனர்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த டிரெவிஸ் ஹெட், ஸ்டார்க் மற்றும் ரவீந்திரா ஆகியோர் மீது ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

    • இந்திய கிரிக்கெட்டில் முன்னணி வீரராக விராட் கோலி உள்ளார்.
    • விராட் - அனுஷ்கா ஜோடி திருமண நாளை கொண்டாடினர்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நேற்று தங்களின் ஆறாவது திருமண நாளை கொண்டாடினர். இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருமண நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.


    உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்ற திருமண நாள் கொண்டாட்டத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். இது தொடர்பான பதிவில், " இன்றைய தினம் காதலன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் முழுமையாக கழிந்ததால், கிராமில் பதிவிட அதிக தாமதம் ஆகி விட்டது. 6+ இன்ஃபினிட்டி எமோஜி, காதல் சின்னம் எமோஜி, எனது நியுமெரோ யூனோவுடன்" என குறிப்பிட்டு கோலியுடன் கட்டியணைத்து நிற்கும் புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா பகிர்ந்துள்ளார்.



    அனுஷ்கா ஷர்மா மட்டுமின்றி விராட் கோலியும் தனது இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா ஷர்மாவுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

    • இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை.
    • ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது.

    இணைய தளத்தில் மிகப்பெரிய தேடும் மையமாக கூகுள் அமைந்துள்ளது. கூகுள் பக்கத்தில் தேடினால், கிடைக்காதது ஏதும் கிடையாது எனலாம். இணைய தளம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சந்தேகம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவதாக கூகுள்தான்.

    இவ்வளவு புகழ் வாய்ந்த கூகுள் நிறுவனம், தங்களது தேடும் பக்கத்தில் கடந்த 25 வருடத்தில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர், விளையாட்டு வீரர் யார் என்பதை தெரிவித்துள்ளத.

    இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் தெண்டுல்கர், எம்எஸ் தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களை பட்டியல் இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சர்வதேச சதங்கள் (50) அடித்த விராட் கோலிதான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.

    விராட் கோலி இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார். கேப்டனாக இருந்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை. இருந்த போதிலும் கூகுளில் தேடும் நபர்களில் நம்பர் ஒன்னாக திகழ்கிறார். இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பத்திக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    ஆனால் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு முதல் இடம் கிடைக்கவில்லை. போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 38 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல்-நகர் கிளப்பில் விளையாடி வருகிறார். 38 வயது ஆனாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.

    ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது. ரொனல்டோ ரியால் மாட்ரிக் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய காலம் கால்பந்து விளையாட்டின் பொற்காலம் எனலாம்.

    ரொனால்டோ மாஸ்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிக் அணிகளுக்காக விளையாடிய 15 வருட காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.

    ×