என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
    • டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஒவர் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ஜோகன்னஸ்பர்க்கிலும் மழை குறுக்கிடலாம். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் மழை பெய்வதற்கு 25 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கடினமாக உழைத்து வந்த நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு இன்னிங்சையும் முதல் இன்னிங்ஸ் போல் விளையாடுவீர்கள்.
    • அவர் எந்த வெற்றியைப் பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் டிஎல்எஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இளம் வீரர் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் அடித்து இந்தியா 180 ரன்கள் குவிக்க உதவினார்.

    இந்நிலையில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது என்று கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது. நீங்கள் முதல் தர கிரிக்கெட்டில் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக விளையாடி கடினமாக உழைத்து இந்தியாவுக்காக விளையாட வரும்போது உங்களின் ஒவ்வொரு இன்னிங்சுக்கும் தனி மதிப்பு இருக்கும்.

    அப்படி கடினமாக உழைத்து வந்த நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு இன்னிங்சையும் முதல் இன்னிங்ஸ் போல் விளையாடுவீர்கள். அந்த வகையில் விளையாடும் ரிங்கு சிங் எந்த வெற்றியைப் பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் எந்த வாய்ப்பையும் எளிதாக பெறவில்லை.

    என்று கம்பீர் கூறினார்.

    • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • முதல் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது.

    மும்பை:

    இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது. தீப்தி ஷர்மா 60 ரன்களுடனும், பூஜா வஸ்த்ரகர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக லாரன் பெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் கவுர் 49 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஒரு ரன் எடுக்க முயற்சித்த அவர் பாதி தூரம் ஓடினார். மறுமுனையில் இருந்த வீராங்கனை ரன் வேண்டாம் என்று கூறியதால் கவுர் கிறீசுக்கு திரும்பினார். கிறீஸ் அருகே வந்த அவர் பேட்டை கோட்டிற்கு முன் வைத்தார். ஆனால் பேட் எதிர்பாராதவிதமாக பிட்சில் சிக்கி கொண்டது. இதனால் அவர் ரன் அவுட் செய்யப்பட்டார். அவர் எந்தவித சிரமமும் இன்றி கிறீசுக்குள் வந்திருக்கலாம். ஆனால் அவர் மெத்தனமாக செயல்பட்டதே இந்த ரன் அவுட்டுக்கு காரணமாக அமைந்ததது.

    இதேபோல மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியிலும் கவுர் இதேபோல ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2023-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முழுவதும் நிதிஷ் ராணா கேப்டனாக செயல்பட்டார்.
    • 2024-ம் ஆண்டு கேகேஆர் அணியின் துணை கேப்டனாக ராணா நியமனம்.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனை கேகேஆர் அறிவித்துள்ளது.

    அதன்படி கேகேஆர் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக 2023-ம் ஆண்டு ஐயர் விளையாடவில்லை. அதனால் அந்த சீசன் முழுவதும் கேப்டனாக நிதிஷ் ராணா செயல்பட்டார்.

    காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடிக்காத ஐயர், 2023-ம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பையில் களமிறங்கினார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 2023 உலகக் கோப்பையிலும் அவர் இடம் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிலையில் மீண்டும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

    சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டேவிட் வார்னர் 164 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். வார்னர் 41 பந்தில் அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக கவாஜா நிதானமாக விளையாடினார். இதனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது.

    முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. கவாஜா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் 16 ரன்னிலும் ஸ்மித் 31 ரன்னிலும் வெளியேறினார்.

    ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய திராவிஸ் ஹெட் 40 ரன்னிலும் டேவிட் வார்னர் 164 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஸ் 15 ரன்னிலும் அலெக்ஸ் கேரி 14 ரன்னிலும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • முதல் அரையிறுதியில் தமிழக அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்தது. தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் பாபா இந்திரஜித் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார். இவர் இந்த போட்டியில் காயத்துடன் விளையாடியுள்ளார். கழிவறையில் தவறி விழுந்ததால் அவரது உதட்டில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வாயில் பிளாஸ்திரி போட்டு விளையாடினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 3-வது இடத்தில் ஆதில் ரஷீத் (இங்கிலாந்து), ஹசரன்கா (இலங்கை) ஆகியோர் உள்ளனர்.
    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    20 ஓவர் போட்டியில் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

    சமீபத்தில் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதலிடத்தை பிடித்து இருந்தார்.

    இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பந்து வீச்சாளர் தரவரிசையில் ரவி பிஷ்னோயுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான் இணைந்து முதலிடத்தை பிடித்தார். இருவரும் 692 புள்ளிகளுடன் உள்ளனர். இதே போல் 3-வது இடத்தில் ஆதில் ரஷீத் (இங்கிலாந்து), ஹசரன்கா (இலங்கை) ஆகியோர் உள்ளனர்.


    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (787), 3-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் (758) உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காள தேசத்தின் ஷகீப்-அல்-ஹசன் 272 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி (210), 4-வது இடத்தில் இந்தியாவின் ஹர்த்திக் பாண்ட்யா (200) உள்ளனர்.

    • மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.
    • கவாஜா 41 ரன்னிலும், லபுசேன் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் நகரில் தொடங்கியது.

    பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால், குர்ரம் ஷாஜாத் ஆகியோர் அறிமுகமானார்கள். டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். தொடக்க ஜோடி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது.

    குறிப்பாக டேவிட் வார்னர் பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் அதிகரித்தது. வார்னர் 41 பந்தில் அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக கவாஜா நிதானமாக விளையாடினார். இதனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது.

    முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 25 ஓவரில் 117 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 72 ரன்களுடனும், காவாஜா 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. கவாஜா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் 16 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் சுமித் ஜோடி சேர்ந்தார்.

    ஒரு பக்கம் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் மறுமுனையில் டேவிட் வார்னர் 125 பந்தில் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். இவரது சதத்தால் ஆஸ்திரேலிய தேனீர் இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தது.

    தற்போது ஆஸ்திரேலியா 54 ஓவரில் 230 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    • ஐ.சி.சி.யின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அனுமதியை பெற தொடர்ந்து போராடுவேன்.
    • நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. நான் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன், நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா, அணிந்திருந்த 'ஷூ'வில் சுதந்திரம் அனைவருக்குமானது. எல்லா உயிர்களும் சமமானது என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அவர் அந்த வாசகத்தை வைத்துள்ளார். ஐ.சி.சி. விதிமுறைப்படி எந்தவொரு அரசியல் குறித்தான பதிவையும் வீரர்கள் அணிந்திருக்க கூடாது.

    இதையடுத்து அந்த வாசகம் இடம் பெற்ற ஷூவை கவாஜா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணியக்கூடாது என்று ஐ.சி.சி. தெரிவித்தது.

    இதுகுறித்து "கவாஜா கூறும்போது, ஐ.சி.சி.யின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அனுமதியை பெற தொடர்ந்து போராடுவேன்" என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, "அனைத்து உயிர்களும் சரிசமம் என நான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை; அரசியலும் இல்லை. நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. நான் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன், நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும், ஆனால் ஐசிசி எனக்கு அபராதம் விதித்துக் கொண்டே இருக்கும்.

    சில சமயங்களில் விளையாட்டிலிருந்து விலக்கி வைக்கும். நான் சொன்னதில் நிற்கிறேன். நான் என்றென்றும் நிற்பேன். முடிந்தவரை செய்ய முயற்சிப்பேன். ஏற்கனவே ஐசிசி அனுமதித்த முன்னுதாரணங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். இந்த நடவடிக்கையை நியாயமற்றது" என்றார்.

    • மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
    • இந்திய வீரர்கள் யாரும் அதுவரை செய்யாத சாதனை.

    ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அபாரமாக செயல்பட்டார். தொடரில் தான் விளையாடிய ஏழு போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது 2023 உலகக் கோப்பை தொடரில் மற்ற பந்துவீச்சாளர்களை விட அதிகம் ஆகும். இதில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    ஒரே உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகளை தகர்த்த முகமது ஷமி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் அதுவரை செய்யாத சாதனையாக அமைந்தது. இலங்கை அணிக்கு எதிராக முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய சம்பவம் தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

     


    வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் போது தனது ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி தரையில் முழங்காலிட்டு அமர்ந்தார். இதனை நெட்டிசன்கள் வேறு விதத்தில் புரிந்து கொண்டு, அதனை சர்ச்சையாக்கும் செயலில் தீயாக ஈடுபட்டனர்.

    அதன் படி, "ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய போட்டி ஒன்றில் நீங்கள் தரையில் முழங்கால் வைத்தீர்கள். உடனே பாகிஸ்தானை சேர்ந்த சிலர், முகமது ஷமி ஒரு இந்திய முஸ்லீம், அவர் சஜ்தா (பிரார்த்தனை) செய்ய முற்பட்டார், ஆனால் இந்தியாவில் இதை செய்ய அவர் அஞ்சுகிறார்," என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் முகமது ஷமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த முகமது ஷமி, "யாராவது சஜ்தா செய்ய நினைத்தால், யார் தடுக்க முடியும். நான் மற்ற மதத்தை சேர்ந்த யாரையும் அப்படி தடுக்க மாட்டேன், நீங்களும் மற்ற மதத்தை சார்ந்த யாரையும் அப்படி தடுக்க மாட்டீர்கள். எனக்கு சஜ்தா செய்ய வேண்டுமெனில், நான் அதை செய்வேன். அதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது? நான் ஒரு முஸ்லீம் என்பதை பெருமையுடன் கூறுவேன். நான் ஒரு இந்தியன் என்று கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன்."

     


    "எனக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், நான் இந்தியாவில் வசித்து இருக்க மாட்டேன். நான் சஜ்தா செய்ய யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டும் என்றால், நான் ஏன் இங்கு வாழ வேண்டும். நானும் அத்தகைய கருத்துக்களை சமூக வலைதளத்தில் பார்த்தேன். நான் எப்போதாவது மைதானத்தில் சஜ்தா செய்திருக்கிறேனா? நான் ஏற்கனவே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன். நான் சஜ்தா செய்ய வேண்டுமெனில், நான் அதை எங்கு செய்ய வேண்டும் என சொல்லுங்கள், நான் அதை செய்வேன்."

    "இந்தியாவின் ஒவ்வொரு மேடையிலும் நான் அதை செய்வேன். யாரும் என்னை தடுக்க முடியாது. இவர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் உங்களுடனோ அல்லது என்னுடனோ இல்லை. அவர்கள் யாரையும் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு பிரச்சனை மட்டுமே ஒரே குறிக்கோள். நான் எனது உடலை வருத்திக் கொண்டு பந்துவீசியதால் முழங்காலிட்டேன். எனக்கு சோர்வாக இருந்தது. மக்கள் அந்த செய்கையை வேறு மாதிரி நினைத்து கொண்டனர்," என தெரிவித்துள்ளார். 

    • முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 293 ரன்கள் எடுத்தது.
    • தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    இந்நிலையில், இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற அரியானா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியின் ஹிமான்ஷு ராணா சதமடித்து அசத்தினார்.

    தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் அவுட்டாகினர்.

    பாபா இந்திரஜித் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார். தினேஷ கார்த்திக் 31 ரன்னும், ஜெகதீசன் 30 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், தமிழக அணி ரன்களுக்கு 230 ஆல் அவுட்டானது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    அரியானா சார்பில் அன்ஷுல் கம்போஜ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    நாளை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் மோத உள்ளன.

    • எனது பயிற்சியாளர்களில் அஸ்வினும் ஒருவர் என ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் கூறினார்.
    • அஸ்வினிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்றார்.

    சிட்னி:

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தனியார் நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அஸ்வின் உலகத்தரம் வாய்ந்தவர். நிச்சயமாக அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு வகையில் அவர் எனது மிகப்பெரிய பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.

    நான் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நாங்கள் இருவரும் அந்த 500 விக்கெட்களை எட்டுவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என புகழாரம் தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 489 விக்கெட்களும், நாதன் லயன் 496 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×